கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ ? Tulsa, Oklahoma, USA 60-0328 1நம்புகிறேன்! நம்புகிறேன் யாவும் கைக்கூடிடும், நம்புகிறேன். நாம் நின்று கொண்டிருக்கும் இந்த வேளையில், ஜெபத்திற்காக, சற்று நேரம், நம் தலைகளை தாழ்த்துவோமாக! இரக்கமும், கிருபையும் உள்ள எங்கள் பிதாவே, உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உம்முடைய கிருபையின் சிங்காசனத்திலிருந்து, இரக்கத்தை கேட்டு, உம்மை அணுகுகிறோம். பரலோக பிதாவே, இன்றிரவு, நீர் எங்களை கண்ணோக்கிப் பார்த்து, எங்கள் மீது இரக்கமாயிருக்கும்படியும், உமது கிருபையை, நீர் எங்களுக்கு அருளும்படியும், நாங்கள் ஜெபிக்கிறோம், உம்முடைய மகத்தான, பரிசுத்த பிரமாணத்துக்கு விரோதமான, எல்லா குறைகளையும், மீறுதல்களையும் எங்களுக்கு மன்னியும். இன்றிரவு, உம்முடைய தெய்வீக பிரசன்னத்தில் இருக்கும், ஒவ்வொருவரையும் நினைத்தருளும் என்று ஜெபிக்கிறோம். சற்று முன்பாக கொடுக்கப்பட்ட, இந்த மகத்தான செய்தியானது, ஒவ்வொருவருடைய இருதயத்திலும் ஆழமாக பதிந்து, விசுவாசத்தினால் நீர் பாய்ச்சப்பட்டு, உம்முடைய ராஜ்யத்துக்கு மகத்தான அறுவடையை கொண்டு வரட்டும்! இந்த இரவு ஆராதனை முடியும் போது, எங்கள் மத்தியில், ஒரு பெலவீனமான நபரும் இராதபடிக்கு, அனுக்கிரகம் செய்வீராக. மன்னிக்கப்படாத பாவங்களுடன், ஒரு ஆத்துமாவும், இங்கிருக்க வேண்டாம். இன்றிரவு, ஆராதனை முடிந்து, நாங்கள் எங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்லும் போது, எம்மாவூர் சீஷர்கள் சொன்னபடியாக, ''வழியில் அவர் நம்மோடு பேசினபோது, நம்முடைய இருதயங்கள் நமக்குள் கொழுந்து விட்டு எரியவில்லையா?'' என்று, நாங்களும், இந்த சாலையை கடந்து போகும் போது சொல்வோமாக! உம்முடைய குமாரனாகிய, இயேசுவின் நாமத்தில், நாங்கள் இதை கேட்கிறோம் ஆமென்! நீங்கள் உட்காரலாம். 2நான் கார் ஓட்டிக்கொண்டு, இப்பொழுது தான் இங்கு வந்து சேர்ந்தேன், பிரசங்கிக்கப்பட்ட செய்தியின் கடைசி பாகத்தைதான், என்னால் கேட்க முடிந்தது. நான், சரியான நேரத்திற்கு இங்கு வரமுடியாத்தினால், அந்த செய்தியின் துவக்கத்தை, என்னால் கேட்க முடியவில்லை. ஆகவே, அதற்காக நான் வருத்தப்படுகிறேன். இன்றிரவு, நமக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது, என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, நேற்று மாலை நம்மால் ஜெபிக்க முடியாமல் போன, அந்த ஜெப அட்டைகளை அழைப்பதற்கு முன்பு, இந்த மக்கள் கூட்டத்தில், ஒவ்வொருவரும் அமைதியாக, அவரவர்களுடைய இடத்தில் இருக்கும்படி செய்யத்தக்கதாக, நான் சற்று உங்களுடன், தேவனுடைய வார்த்தையின் மேல், சில நிமிடங்கள் பேச விரும்புகிறேன். அப்போது, கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து, வியாதியஸ்தரை சுகமாக்கி, இரட்சிக்கப்பட தக்கவர்களை அவர் இரட்சிப்பார். இந்த ஞாயிற்றுக்கிழமை மத்தியான வேளையில், நான் மேடையின் மேல் நடந்து கொண்டு இருந்தேன், அப்போது, நான் ஏதாகிலும் தவறு செய்துவிட்டேனோ என்பதாக உணர்ந்தேன், ஏனெனில், ஒரு பிரசங்கத்திற்கு பிறகு, நான் பேச வந்ததுதான் அது. ஏனென்றால், நமது கிருமையுள்ள சகோதரன் டாமி ஆஸ்பான் (Tommy Osban) ஏற்கெனவே ஒரு செய்தி கொடுத்திருந்தார். மேலும், என் மகன் பில்லி, நாங்கள் வெளியே சென்றபோது, அவன், “அப்பா ஏன் அதற்கு மேல் எதையும் பேசவில்லை?'' என்று கேட்டான். ''மேலும் பரிசுத்த ஆவியானவர் அப்படியே, அந்த அறையை நிரப்பியிருந்தார்” என்று கூறினான். மறுபடியும் நான் இன்றிரவு, இங்கு மேலே வந்தபோது, அதே காரியம் நிகழ்ந்தது. எப்படியாயினும், நான் ஒரு பெரிய பிரசங்கி அல்ல, அதற்கு போதுமான கல்வி அறிவும், என்னிடத்தில் இல்லை. ஆனால், அவருக்காக, ஏதாகிலும் ஒன்றை செய்ய, என் இருதயம் வாஞ்சிக்கிறதை அவர் பார்த்து, அதற்குண்டான, கல்வி தகுதி மற்றும், வேறு எந்த தகுதியும் என்னில் இல்லாதிருந்தும், கர்த்தர், அவருடைய சுவிசேஷத்தை நான் அறிவிக்க, வேறொரு வழியை எனக்கு கொடுத்திருக்கிறார். என் முழு இருதயத்தோடும், அவரை நேசித்து, நான் அவரை மெச்சிக் கொள்வதை காண்பிக்கும் பொருட்டு, அவர் என்னை அனுமதித்ததற்காக, நான் மிகவும் மகிழ்ச்சி உடையவனாயிருக்கிறேன். 3ஆதியாகம் புத்தகம் 18ம் அதிகாரம், 14ம் வசனத்தின் முதல் எட்டு வார்த்தைகளாகிய, இதை மட்டும் நான் வாசிக்க விரும்புகிறேன்: “Is 'There Anything too Hard for the Lord” (ஆங்கில வேதவசனத்தின் எட்டு வார்த்தைகள்) ''கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ.'' இப்பொழுது, சபையாருடைய உணர்வுகளை பற்றி பிடிக்கதக்கதாக, நாடக வடிவில், இதை நான் பேச விரும்புகிறேன். அவர்கள் வந்து, என்னை அழைப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பாக, நான், அங்கே, ஒருவரும் என்னை தொல்லைப்படுத்தாமல் இருக்கும்படிக்கு, அறையின் கதவை மூடி, ஜெபித்த வண்ணமாய் காத்துக் கொண்டிருந்தேன். தொடர்ந்து ஜெபித்து கொண்டிருந்தேன். அப்பொழுது, அவருடைய பிரசன்னம் மிகவும், சமீபமாய் இருக்கிறதை நான் உணருகிற போது, சில நேரங்களில், அந்த வெளிச்சத்தை நான் நோக்கி பார்த்திருக்கிறேன், அது, நீங்கள் புகைப்படத்தில் பார்க்கிற அந்த வெளிச்சம் தான். இப்பொழுது, உலகம் முழுவதும், அது சென்று கொண்டிருக்கிறது. அதன் பிறகு, நான் கூட்டத்திற்கு வந்து, அவருடைய பிரசன்னத்தில் பரிவுடன் உலாவி, பரிசுத்த ஆவியானவர் இந்த கூட்டத்தின் மத்தியில், எங்கே அசைவாடுகிறார் என்பதை, உணர்ந்த பிறகு மாத்திரமே, என்னால் ஜெப வரிசையை நடத்த முடியும். 4இப்பொழுது, இந்த அதிகாரத்தின் முதல் பாகத்தில், ஆபிரகாம் அந்த உஷ்ணமான பகல் வேளையில், தன்னுடைய கூடாரத்தின் வாசலண்டையில் உட்கார்ந்திருக்கிறதை, நாம் பார்க்கிறோம், அது ஒரு மிகவும் உஷ்ணமான், ஒரு பகல் வேளையாக இருந்திருக்க வேண்டும். ஒருவேளை, அங்கே, அந்த மேய்ப்பர்கள் அவனிடத்தில் தாமதமாக வந்து, நிலம் வரண்டு போய், எல்லா புற்களும் காய்ந்து போய்விட்டன என்றும், அதனால், கால் நடைகள் யாவும் மெலிந்து விட்டன என்றும், மேலும், நீர் வரத்து முழுவதும் இல்லாமல் போய்விட்டன என்றும், அநேக புகார்களை கூறிய வண்ணம் இருந்திருப்பார்கள். அந்த நிலத்திலே, அவர்கள் துரவுகளை தோண்டினார்கள், ஆனால், அதில் தண்ணீர் குறைய, குறைய அவர்களும் அதைவிடாமல், தொடர்ந்து தோண்டி, தோண்டி முடிவில், அந்த நீரானது சுரக்கும் பாறைவரைக்குமாய், சென்று விட்டார்கள். ஆனாலும், கால்நடைகள் குடிக்க, போதுமான தண்ணீர் இன்னுமாக கிடைக்கவில்லை. உங்களுக்கு தெரியுமா? சில நேரங்களில் காரியங்கள், இருள் சூழ்ந்த நிலையில், தவறாக போகும் போது, நாம் இயற்கையாய் அறிந்த வண்ணம், பகலுக்கு முன் ஒரு இருள் இருக்கத்தான் வேண்டும், மேலும், அநேக சமயங்களில், பேரழிவான சம்பவங்கள் நடக்கிறதை நாம் பார்க்கும் போது, விசேஷமாக விசுவாசிகளுக்கு அது நடக்கும் போது, அது, நமது வழியில் வரப்போகிற ஆசீர்வாதத்தை, தடை செய்யும்படிக்கு, சாத்தான் முயற்ச்சிக்கிற காரியம் என்பதை, நாம் நம்முடைய சிந்தையில் கொண்டிருக்க வேண்டும். 5இந்த கதையில், அவ்விதமான காரியங்கள் அதிகமாய் காணப்படுகிறது. அவர்கள் இருவருக்கும், தாங்கள் ஏதோ தவறு செய்து விட்டோமோ, என்ற உணர்வை கொண்டு வரும்படிக்கு, சாத்தான் அவர்களை சோதிக்க முற்பட்டான். மேலும், அவன் ஆபிரகாமுக்கும், சாராளுக்கும், தேவன் அருளப்போகிற அவருடைய வருகையின் சந்திப்பை, (Oncoming visitation) தடை செய்ய முயற்ச்சித்தான். தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு, சகலமும், நன்மைக் கேதுவாய் நடக்கிறது என்று வேதவாக்கியங்கள் மூலம் நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். அங்கே காரியங்கள் காண்பதற்கு, எவ்வளவு மோசமாக இருந்தாலும், அது பொருட்டல்ல! நினைவில் கொள்ளுங்கள், அது உங்களுடைய நன்மைக்காகவே நடந்தாக வேண்டும். அதற்காக, நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நாள் முழுவதும், சாத்தான் என்னை பின் தொடர்ந்து கொண்டிருந்தான். ஆகவே, இந்த பட்டணத்தில், எங்கோ என்னுடைய ஆசீர்வாதம் வைக்கப்பட்டிருக்கிறது, என்று நான் அப்படியே விசுவாசித்தேன். அவன் வழியை அடைத்து, கவர்ந்திழுத்து சோதிக்கும் போது, அவன் என்ன செய்ய முயற்சிக்கிறான்? உங்களுக்கு, அவிசுவாசம் உண்டாகும்படி செய்கிறான், என்பதை நான் அறிவேன். தேவனை அவிசுவாசிப்பதே, நீங்கள் செய்கிற மிக மோசமான காரியம், நீங்கள் சிறிதளவு பயந்து, ஒரு வேளை, இதை நான் செய்திருக்க கூடாது, அதை நான் செய்திருக்க கூடாது, என்று கூறின் மாத்திரத்தில், சரியாக, அப்பொழுதே சாத்தான் உங்களுக்காக ஜெயங்கொள்ளப்பட்ட ஆசீர்வாதத்தை, எடுத்துக் கொண்டு விடுகிறான். சாத்தான், அவ்விதமாக உங்களை நினைக்க செய்யுமட்டும், உங்களால் அதை அடைய முடியாது. 6மேலும், ஒருவேளை, அவ்விதமாக, கவர்ந்திழுக்கும் சோதனைக்கு, நாம் செவி கொடுத்து, அவைகளுக்கு, நம்முடைய கவனத்தை செலுத்துவோமாகில், அப்போது, அவருடைய ஆசீர்வாதத்தை தவறவிட்டவர்களாய் காணப்படுவோம். எனக்கு, அவ்விதமான ஒரு நேரம் உண்டாயிருந்தது, ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு, ஜெபிப்பதற்காக, ஒரு இடத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, என்கிற காரியம், இப்பொழுது, என் சிந்தையில் வருகிறது. கர்த்தர் என்னை வனாந்திரத்துக்குள் வழி நடத்துகிறது போல் தோன்றியது. அங்கே, கீழே, தெற்கு இந்தியானாவில், ஒரு சிறுமி, வியாதியின் படுக்கையில் இருந்தாள். அவளுக்கு காசநோய் இருந்தது. அவள், ஒன்பது வருடங்கள், எட்டு மாதங்களாக தன் தலையை தலையனையிலிருந்து கூட தூக்க முடியாதவளாய் இருந்தாள். அவள், தெய்வீக சுகத்தை நம்பாத ஒரு சபையை சார்ந்தவளாய் இருந்தாள். 7அந்த சமயத்தில், நான் சுழற்சி முறையில், அங்கே, மில்டவுன் பாப்டிஸ்ட் சபையை கண்காணிக்க வேண்டியிருந்தது. நான், ஒரு பாப்டிஸ்ட் ஊழியக்காரனாய் இருந்தபடியால், சுழற்சி முறையில் பிரசங்கித்து வந்து கொண்டிருந்தேன். அப்போது, இந்த சபையையும், என் கண்காணிப்பிற்குள் எடுத்துக் கொண்டிருந்தேன், மேலும், கர்த்தர், அங்கு மகத்தான காரியங்களை செய்து கொண்டிருந்தார். ஏறக்குறைய, பதினேழு வயதுடைய, அந்த சிறுமிக்காக, நான் வந்து ஜெபிக்க வேண்டுமென்று, அவர்கள், ஆள் அனுப்பி கேட்டுக் கொண்டார்கள். அவள் மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். ஒரு அருமையான சகோதரன், என்னை அங்கே அழைத்துச் சென்றார். அந்த சிறுமியின் தகப்பனார், தெய்வீக சுகத்தையே நம்பாத, அந்த குறிப்பிட்ட சபையின் டீக்கனாக இருந்தார். மேலும், நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்த, அந்த பாப்டிஸ்ட் சபைக்கு, அவர்களுடைய அங்கத்தினர்கள் எவராகிலும், வந்து கலந்து கொண்டால், அவர்கள், அந்த சபையில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள், என்று அறிவித்து இருந்தார்கள். அவளுடைய தகப்பனார், அங்கே ஒரு டீக்கனாய் இருந்தபடியால், அது, அவரை ஒரு கடினமான சூழ்நிலையில் வைத்தது. 8ஆகவே, என்னால் முடிந்த மட்டில், அதை சுருக்கமாக விளக்கி கூறுகிறேன். நான், அந்த சிறுமியை பார்க்க சென்றது, என் நினைவில் இருக்கிறது. அவளுடைய தாயார், அந்த அறையை விட்டும், அவளுடைய தகப்பனார், தன் வீட்டை விட்டும், கடந்து வெளியே போய் விட்டார்கள். ஏனெனில், அவர்கள் இருவரும், இதோடு எந்த சம்பந்தமும் கொள்ள விரும்பவில்லை. ஆனால், அந்த சிறுமி, நான் எழுதினதான, “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்” என்ற புத்தகத்தை வாசித்து முடித்திருந்தாள். நான், அந்த அறைக்குள் சென்ற போது, அவளால், தன்னுடைய இருமலினால் வரும் எச்சிலை, உமிழ உபயோகப்படுத்துகிற கோப்பையை கூட, தன் கைகளால் பிடித்து தூக்க முடியாதவளாய் இருந்தாள். அவளுடைய எடை, ஏறக்குறைய, முப்பத்தைந்து அல்லது நாற்பது பவுண்டுகள் மட்டுமே இருந்தது. 16 -18 கிலோ மட்டுமே ஒரு பவுண்ட் என்பது 454 கிராம்) அவளுடைய சிறிய கால்கள், அங்கே, அந்த புகைப்படத்தில் காணப்படுகிற, புற்று நோயிலிருந்து குணமாக்கப்பட்ட, பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் கால்களை விட, மெலிந்து காணப்பட்டது. நான், அவளுக்கு ஜெபித்து முடித்த பிறகு, அவள் என்னிடம், அநேக நாட்களாய் முடமாய் இருந்த, அந்த மெத்தடிஸ்டு சிறுமி, நெயில் (Nail) ஐ போல, என்னால், நடந்து போக முடியுமா? என்று கேட்டாள். அதற்கு நான், “சகோதரியே, அவளுடைய விஷயத்தில், கர்த்தருடைய தூதனானவர் என்னோடு பேசி, அந்த தேசத்துக்கு போய், அந்த சிறுமியை தேடி கண்டுபிடி, என்று கூறினார்” என்றேன். நல்லது, ஆனால், “உன் விஷயத்தில், அது குறித்து எனக்கு தெரியாது” என்று கூறினேன். 9சபையில், புதிதாக ஊழியத்தை துவக்கி, இரண்டு வார எழுப்புதல் கூட்டங்களுக்கு பிறகு, நாங்கள், டோட்டன்ஸ் போர்டு (Tottens Ford) என்ற இடத்தில், ஒரு ஞானஸ்நான ஆராதனையை கொண்டிருந்தோம். அந்த மத்தியான வேளையில், ஒரு நூற்று ஐம்பது பேருக்கு, தண்ணீர் ஞானஸ்நானத்தை கொடுத்து, அதன் பிறகு, என்னுடைய, சில நண்பர்களுடன் சேர்ந்து, இரவு உணவுக்காக, என்னுடைய பழைய நண்பர், ஜார்ஜ் ரைட் (George Wright) அவர்கள் வீட்டிற்கு சென்றோம். ஏதோ ஒன்று என்னிடம், “வனாந்திரத்துக்கு போய் ஜெபி” என்று கூறி உந்தினது, நல்லது, அதை என்னுடைய சிந்தையில் இருந்து, என்னால் எடுத்து போட முடியவில்லை. இப்போது, ஏதாகிலும் ஒன்று உங்களை உந்தும்போது, நீங்கள் போய், அதை அப்படியே செய்யுங்கள், ஏனெனில், அது பரிசுத்த ஆவியானவர். இப்பொழுது, அதை ஏதோ ஒன்று தடை செய்வதை கவனியுங்கள். திருமதி ரைட் அவர்கள், (Wright) ''சகோதரன் பில்லி, அந்த பண்டைய காலத்தில் கிராமங்களில், சாப்பிட அழைக்கும் மணியை, நான் அடிக்கும் போது, என்றார்கள். (இங்கே ஒக்லஹோமா (Okalahoma) வில் அவ்விதமாக இருக்கிறதா, என்று என்னால் யூகிக்க முடியவில்லை. ஆனால், அங்கே மலை தேசத்தில், அவர்கள் மணியை அடிப்பார்கள், அந்த விவசாயிகள், அதை கேட்டு, அவர்களுடைய இரவு உணவுக்கு திரும்புவார்கள். மேலும், அந்த சகோதரி, “நான் அந்த மணியை அடிக்கும் போது, இரவு உணவு ஆயத்தம்” என்றாள். மேலும் அவள், “அப்பொழுது நீங்கள் வந்து, இன்றிரவு சபை ஆராதனைக்கு போக ஆயத்தபடுங்கள்” என்றாள். அதுதானே எழுப்புதல் கூட்டத்தின் கடைசி ஆராதனையாய் இருந்தது. 10நான், சகோதரி ரைட், அது நல்லது என்றேன். பின்பு நான், மலையின் மேலாக ஏறி முழங்கால்படியிட துவங்கினேன். அப்போது, அந்த கூர்மையான பசும்புற்கள், என்னை அறுத்து கொண்டிருந்தது. இன்னும் சற்று முன்பாக சென்ற போது, அந்த இடம் பாறைகளுடன், மிகவும் கரடுமுரடாய் காணப்பட்டது. அந்த பாறைகள், எனக்கு செளகரியமாய் இருக்கவில்லை. அந்த மலையின் பக்கத்தில் சுற்றிப்போனேன். அது பக்கவாட்டில் அதிகமாக சரிந்து காணப்பட்டது. நீங்கள் அறிந்திருக்கிறப்படி, அது, நீங்கள் ஆசீர்வாதத்தை பெறாதபடிக்கு, பிசாசு உங்களை விலக்கி வைக்க முயற்சிப்பதே ஆகும். அவையாவும் அதுவே. அதன்பின், இன்னும் சற்று முன்னோக்கி ஏறி, அடர்ந்த புதருக்குள்ளாக போய், முழங்கால் படியிட்டேன். அங்கே, கொசுக்கள் என் செவியை சுற்றிலும், ரீங்காரமிட்டப்படியால், என்னால் ஜெபிக்க முடியவில்லை. அது, பிசாசு என்பதை, அப்பொழுது அறிந்து கொண்டேன். ஆகவே, நான், “ஓ தேவனாகிய கர்த்தாவே, இரக்கமாயிரும் என்று கூறி ” இந்த கொசுக்கள் விரும்பினால், அப்படியே, என்னை மொய்த்துக்கொள்ளட்டும் என்று, அது எப்படியாயினும், நான், என் கரங்களை மேலே உயர்த்தி, ஜெபிக்க துவங்கினேன். ஆனால், ஏதோ ஒரு காரியம், என் இருதயத்தில் பாரமாயிருந்தது. அதன் பிறகு, ஜெபத்தில் நான் என்னையே இழந்தவனாய் காணப்பட்டேன்... கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஜெபத்திலே இழக்கப்பட்டுபோதல் என்றால் என்ன என்பதை அறிந்திருக்கிறீர்கள், என்று நான் யூகிக்கிறேன். அது அப்படியே, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், என்பதையே மறந்து போதல் ஆகும். அதுதான், ஆவிக்குள்ளாகி ஜெபிக்கிற காரியம் என்று நான் நம்புகிறேன். நான், என் கண்களை திறந்தபோது, அந்த சிறிய காட்டுப் பூ பூக்கும், சிறு மரப்புதரின் அருகில், அந்த வெளிச்சமானது, அங்கே தொங்கி கொண்டிருந்தது. நான் இருந்த இடம் வரைக்கும், அந்த வெளிச்சம் பிரகாசித்தது. அவர், ''நீ எழுந்து அந்த சிறுமி கார்ட்டரிடம் போ“ என்று கூறினார். 11நல்லது, நான் சுற்றிலும் பார்த்தபோது அது, ஏறக்குறைய இருளாகவேயிருந்தது. மணி ஓசை அங்கே ஒலித்துக் கொண்டிருக்க, என்னை தேடி கண்டு பிடிக்கும்படி, ஆட்களையும் அனுப்பி இருந்தார்கள். நான் எகிறி குதித்து, அந்த மரங்களின் ஊடாக, மிகவும் துரிதமாக ஓடினேன். அதோடு, அங்கு இருந்த, அந்த சிறிய கம்பி போகிற பாதையை தாண்டி, சரியாக, சகோதரன் ரைட்ஸ் அவர்களை அடைந்தேன். அவர், சகோதரன், பில்லி, “அம்மா அந்த மணியை அடித்து கொண்டே இருந்தார்கள். நாங்களும், உம்மை எல்லா இடங்களிலும் தேடினோம்” என்றார். நான், சகோதரன் ரைட், எனக்கு, சாப்பிட எதுவும் வேண்டாம், அந்த சிறிய ஜார்ஜி கார்ட்டர், அந்த படுக்கையில் இருந்து வெளியே வந்து, ஜீவிக்க போகிறாள் என்றேன். அதற்கு அவர், “உமக்கு அது எப்படி தெரியும்” என்றார். நான், “இப்பொழுது தான், கர்த்தர் என்னை சரியாக, அந்த காட்டு பூ பூக்கும் மரத்தண்டையில் சந்தித்து, அந்த சிறுமி கார்ட்டரிடம் போ என்று கூறினார்” என்றேன். எல்லையின் இருமுனைகளிலும், தேவன் சரியாக பதில் அளிக்கிறார் என்பதை, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அந்த சிறுமி ஜார்ஜி, எப்படியாயினும் ஞானஸ்நானம் பெற்றே தீரவேண்டும் என்று, அந்த மத்தியான வேளை முழுவதும், அழுது கொண்டே இருந்தாள். மேலும், அவளுடைய தாயார், மிகவும் அருமையான ஒரு நல்ல ஸ்திரி. அவளுடைய விலாசத்தை நான் உங்களுக்கு கொடுக்கிறேன், நீங்கள் விரும்பினால், பிறகு, அவளுக்கு கடிதம் எழுதலாம்) அவளுடைய தகப்பனாரும் கூட அப்படியே... அவர்கள், அந்த சிறு பட்டிணத்தின் விளிம்பில் அமைதியாய் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த சிறுமி, அந்த பிற்பகல் முழுவதும், அழுது கொண்டேயிருந்தாள். அவளுடைய தாயார் மிகவும் வாலிபமானவள். ஆனால், ஏறத்தாழ ஒன்பது வருடங்கள், அந்த சிறுமியின் பக்கத்தில் அமர்ந்து, அவள் நொடிந்து மரித்து கொண்டிருந்ததை பார்த்தே, அவளுடைய தலைமயிரெல்லாம் வெண்மையாய் மாறிப்போயிருந்தது. அந்த சிறுமியானவள், கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள், எட்டு மாதங்களாக, இலைகளையோ, புற்களையோ, வேறு எதையுமே பார்க்காதவளாய், தன் படுக்கையிலே படுத்துக்கிடந்தாள். அவர்களால், அந்த சிறுமிக்கு, மல ஜலம் கழிக்கும், பாத்திரத்தை கூட (Bedpan) வைக்க முடியவில்லை, அவளுக்கு கீழாக, ரப்பர் விரிப்பானை போட்டிருந்தார்கள். அந்த ரப்பர் விரிப்பானை, அப்படியே இழுத்து விடும்போது, அதன் அடியில், மெல்லிய பஞ்சு வஸ்திரத்தினாலான சாதாரண படுக்கை விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. மேலும், அவள், தான் சுகமானால் மட்டுமே, ஞானஸ்நானம் எடுக்க முடியும், என்ற விருப்பத்தினால், அழுது கொண்டிருந்தாள். 12மேலும், அந்த மத்தியான வேளையில், நீண்ட காலமாக, பக்கவாதம் அல்லது எலும்பு மூட்டு செயலிழந்ததினால், முடமாயிருந்த, நெய்ல் (Nail) என்ற சிறுமிக்கு, ஞானஸ்நானம் கொடுத்தோம். அந்த வியாதியானது, அவளுடைய காலை முடமாக்கி, உள்ளுக்குள்ளாக இழுத்து வைத்திருந்தது. அவளோ, சாதாரண மற்ற சிறுமிகளை போல, சுகமாகி போனாள். இந்த சிறுமியும், அந்த சிறுமி, நெயில் உடன் சேர்ந்து, ஒன்றாக ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள விரும்பினாள். அவளுடைய தாயார், தன்னுடைய சொந்த மகள், அழுகையோடு படுக்கையில் மரித்துக் கொண்டிருப்பதை காணமுடியாதவளாய், மிகவும் அதைரியப்பட்டு, சமையலறைக்குள் போய்விட்டாள், அங்கே, அவள் தன் கரங்களை உயர்த்தி, “ஓ கர்த்தராகிய இயேசுவே, அந்த ஏமாற்றுக்காரன், இந்த தேசத்தினூடாக வந்து, என் மகளை பிடித்ததினால், அவள் உலுக்கப்பட்டு, முழுவதும் விடாய்த்து போனவளாய் காணப்படுகிறாள்'' என்றாள். மேலும், அவள், அந்த படுக்கையிலே, பரிதாப நிலையில் அவள் மரித்து கொண்டிருக்க, அந்த மனிதன் சுற்றிலும் வந்து, எதையோ ஒன்றை கூறி, இவ்விதமாக, அவளை அழவும், மற்ற எல்லாமுமாய் ஆக்கிவிட்டான் என்று, அவள், ஜெபித்துக் கொண்டிருக்கும் வேளையில்... இப்பொழுது சொல்லபோவது, அவளுடைய கதை, இது உண்மை என்று, என்னால் கூற இயலாது. ஆனால் அது உண்மையாய் இருக்கும் என்று நம்புகிறன்). அங்கே சுவற்றின் மேலாக, ஒரு உருவம் நிழலாக வந்ததை அவள் கண்டு, அங்கே, சில வீடுகளுக்கு கீழாக வசித்து கொண்டிருக்கிற, தன் மகள் தான், தன்னை காணும்படி வருகிறாள் என்று எண்ணினதாக, அவள் கூறினாள். ஆனால், அவள் உற்று நோக்கி பார்த்தபொழுது, சுவற்றின் மேல், இயேசுவின் நிழல் காணப்பட்டதாக அவள் கூறினாள். மேலும், அவர் (இயேசு) இவர் யார்? என்று கூறி, அவள் தன் விரலை, இந்த வழியாக சுட்டிக்காட்டி, ஒரு தரிசனத்தைப் போல, என்னுடைய வழுக்கை ஏர்நெற்றியுடன், நான், ஒரு வேதாகமத்தை மார்பில் அணைத்தவனாய், உள்ளே வருகிறதை, அவள் பார்த்தாளாம். உடனடியாக அவள், எகிறி குதித்து ஓடி, தன் மகளிடத்தில் அதை சொல்லப்போகிற அந்த வேளையில், நான் சரியாக, வாசலண்டையில் சென்று, நிஜமாக நின்று கொண்டிருந்தேன். நீங்கள் விசுவாசிப்பீர்களானால். தேவன் உங்களை, எப்பொழுதும், சரியான நேரத்தில் சந்திப்பார். 13என் விலையேறப் பெற்ற நண்பர்களே, நான், படுக்கையண்டைக்கு நடந்து சென்று, “ஜார்ஜி, ஏன் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால், இயேசு கிறிஸ்து...'' என்று கூறினேன். அவள் படுத்திருந்த கட்டிலின் பின்புறம் பார்த்தால், அதாவது, அவளுடைய கைகள் பின்னாக தொடக்கூடிய அந்த இடத்தில் இருந்த படமானது அவள் அழுது, அழுது கைகளை உயர்த்தி ஜெபிக்கும் போது, அவளுடைய கைகளினால் தேய்த்து, அந்த படத்தின் நிறமானது எடுக்கப்பட்டிருந்தது. நான், ''ஜார்ஜி, இயேசு கிறிஸ்து, உன்னை சுகமாக்குகிறார், உன் கால்களினால் எழும்பி நில்” என்று கூறினேன். நான் ஏன் அப்படி சொன்னேன் என்று, எனக்கு தெரியவில்லை. என்னை பொருத்தவரை, அதை நான், தேவையில்லாமல் சொல்லவில்லை, ஏனென்றால், அவளுடைய கால் தொடை, இந்த அளவுக்கு கூட பெரிதாய் இல்லாதிருக்க, அவளால், எப்படி காலூன்றி நிற்க முடியும்? மேலும், அவளுடைய மெல்லிய கரங்களால், எச்சில் உமிழும் பாத்திரத்தை கூட, தூக்க முடியாதவளாய் இருந்தாள். இப்பொழுது, நீங்கள், அவளுடைய தாயாரை கேட்டால், அவளை குறித்த மருத்துவரின் அறிக்கையை, அவள் உங்களுக்கு தருவாள். என் கைகளால் அவளை தூக்கிவிட்டேன். நண்பனே, அது எப்படி என்று எனக்கு தெரியாது, நான் அதை சொல்லவும் முடியாது, ஆனால், “கர்த்தரால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை'' அந்த சிறுமி, தன் படுக்கையின் மேல் இருந்து எகிறிகுதித்து, சிறு குச்சிகளை போன்ற தன்னுடைய கால்களால், நின்று கொண்டிருந்தாள். நான் திரும்பின போது, அவள் அதிகமாய் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவளாய், வாசலுக்கு வெளியே நடந்து போனாள். மேலும், சில நிமிடங்களில், அவளுடைய தாயார், உறக்க கத்தினவளாய் மயங்கி விழுந்தாள். மக்கள் எல்லாவிடங்களிலுமிருந்து ஓடி வர துவங்கினார்கள். ஜார்ஜி வெளியே சென்று, (பெயர் ஜார்ஜி கார்ட்டர்) புற்களையும், மரத்திலுள்ள இலைகளையும், ஒன்பது வருடங்கள், எட்டு மாதங்களுக்கு பிறகு, முதல் முறையாக பார்த்ததினால், அவைகளை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தாள். ஜனங்கள், அவளுடைய தாயார், மரித்து போய்விட்டாளோ என்று எண்ணி, அவளுக்கு தேவையான உதவிகளை செய்து கொண்டிருந்தார்கள். 14மேலும் ஜார்ஜி, அங்கே, பியானோ அல்லது ஆர்கன் இருக்கிற இடத்துக்கு ஓடி உட்கார்ந்து, அதை வாசிக்க துவங்கினாள். அதாவது, அவள் காச நோயினால் பாதிக்கப்படுவதற்கு முன்பே, பியானோ அல்லது ஆர்கன் பாடங்களை, கற்று கொண்டிருந்திருக்க வேண்டும். அவளுடைய தகப்பனார், அந்த சத்தத்தை கேட்டு, வீட்டின் கொல்லை புறத்திலிருந்து, பால் கேனைகையில் பிடித்தவராய், வேகமாய் ஓடி வந்து, வாசலுக்குள் நுழைந்து, என்ன நடக்கிறது என்று பார்த்த போது, அங்கே அவருடைய மகள், ஆர்கனில் உட்கார்ந்து ''இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே எப்பாவத் தீங்கும் அதினால் நிவர்த்தியாகுமே“ என்ற பாடலை வாசித்துக் கொண்டிருந்தாள்... இப்பொழுது, அவளுடைய பெயர், ஜார்ஜி கார்ட்டர், கார்ட்-ட-ர், (C-a-r-t-e-r) இந்தியாவில் உள்ள, மில்டவுனில் வசிக்கும், ஜார்ஜி கார்ட்டர், உங்களுக்கு விருப்பமானால், நீங்களே அவளுக்கு கடிதம் எழுதி, அந்த சாட்சியை பெற்றுக்கொள்ளுங்கள். அப்படியானால், சரியான ஒரு காரியத்தை செய்யாதபடிக்கு, சாத்தான் உங்களை தடை செய்ய முயற்சிக்கிறான், என்பதை இது காட்டுகிறது. அது என்னவாயிருந்தாலும், தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். 15இப்பொழுது, தூதனுடைய சந்திப்பின் நேரம் வருகிறது என்பதை, சாத்தான் அறிந்து இருந்ததினால், அவன் ஆபிரகாமையும், சாராளையும், தடை செய்ய முயற்ச்சித்துக் கொண்டிருந்தான். எல்லா தொல்லைகளும் எழும்பி, தாறுமாறாக போகும் போது, ஏதோ ஒரு காரியம், தவறாய் போய்க் கொண்டிருக்கிறது என்பது, அப்போது தான் நமக்கு தெரிகிறது. ஒருவேளை, நாம் சாத்தானுக்கு செவி கொடுப்போமானால், சாராள், அங்கே தவறவிட்டது போல, நாமும் அதை பார்க்காமல், தவறவிடக்கூடும், என்று நான் நம்புகிறேன். சாராள், அவ்விதமாக செய்ததினால், நாம் அவளை குறித்து, இவ்விதமாக நினைக்க தோன்றுகிறது. அந்த காலை வேளையில், அவள்தானே, ஒருவிதமான சச்சரவுகளோடு, ஆபிரகாமே, நம்முடைய அத்தியாவசியத் தேவைகள், இங்கே குறைவுப்பட்டு காணப்படுகிறது, மற்றும், நம்முடைய மந்தைகளுக்கு தேவையான, புற்கள் எல்லாம் காய்ந்து போய், தண்ணீர் துறவுகள் எல்லாம்வற்றிப் போய்விட்டன, என்று, நம்முடைய மேய்ப்பர்கள் கூறினது, உங்களுக்கு தெரியும். ஆனாலும், இங்கே வரும்படிக்கு, நீங்கள், தெரிந்து கொண்டு எடுத்த தீர்மானம் தவறானது என்று, நான் நினைக்கிறேன். ஏனென்றால், லோத்துவும், திருமதி லோத்துவும், அவர்களுடைய குடும்பமும், அங்கே திரளாய் பெற்று ஜீவிக்கிறார்கள். ஏன், அதுமட்டுமா, அன்றொரு நாளில், அல்லது சில நாட்களுக்கு முன்பு, அவர்களுடைய பட்டணத்துக்கு நான் சென்ற போது, அங்கே, லோத்துவின் மகள், செல்வி லோத்து, (Miss Lot) என் வாழ்நாளில், இது வரை கண்டிராத, மிகவும், அழகான உடையை உடுத்தியிருந்ததை கண்டேன். அது, எகிப்தியர்களினால் வடிவமைக்கப்பட்டிருந்தது. அங்கே, அவள் புதுபாணியிலே, அந்த ஓட்டக பல்லக்கிலே (Camel Caravan) கடந்து வந்தாள். அவ்விதமாக, புது பாணியிலான ஒட்டக பல்லக்குகள், இங்கே இன்னும் வரவில்லை என்றாள். ஆனால், பாருங்கள், அந்த அழகான ஒட்டக பல்லக்கை காட்டிலும், “மேலான ஒன்று இங்கே வந்து கொண்டிருக்கிறது என்பதை, அவள் சாராள்) அறிந்திருந்தால், நலமாய் இருந்திருக்கும். ”சேனைகளின் கர்த்தர் அந்த வழியாக வந்து கொண்டிருந்தார்.'' 16மேலும், இந்த விதமாக, ஏதோவொன்றை (அவள் சாராள்) சொல்வதை என்னால் கேட்க முடிகிறது. ஆபிரகாமே! ''நீங்கள், அவள் பெற்றிருந்த, அந்த புதிய சிகை அலங்காரத்தை பார்த்திருக்க வேண்டும், மேலும், நீங்கள் அவளையும் பார்க்க வேண்டும் என்றாள். உங்களுக்கு தெரியுமா? ஒரு அறுபது வயது ஸ்திரியானவள், தன்னை, இருபது வயதுள்ளவளாக காண்பிக்க முயற்ச்சிக்கிறாள்... ஆனால், அவைகள் தான், தேவனுடைய காரியங்களிலிருந்து, உங்கள் கவனத்தை கவர்ந்து இழுக்கிறது. அதைதான், நான் உங்களுக்கு கூற முயற்ச்சிக்கிறேன். பாருங்கள், அந்த வயது சென்ற, பரிதாபமான, விசுவாசமுள்ள, சகோதரனாகிய, ஆபிரகாமை, அந்த காரியம், ஒரு துளியும் அசைக்கவில்லை. அவன் சர்வ சாதாரணமாக நடந்து சென்று, கூடாரத்தின் கதவண்டையில் இருந்த, நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டான். அது எனக்கு பிடிக்கும் (I like that). நீங்கள் கவனித்தீர்களா? அந்த தூதர்கள், லோத்துவின் இடத்துக்கு வந்தபோது, லோத்து, வெளிவாசலண்டையில் உட்கார்ந்திருந்தான். ஆனால், ஆபிரகாமோ, கதவண்டையில் உட்கார்ந்திருந்தான். வெளி வாசலிலிருந்து, முற்றத்துக்கு மட்டுமே போகமுடியும், ஆனால், கதவண்டையிலிருந்து, நேராக வீட்டுக்குள் போகலாம். நான் அவரை எவ்வளவாக, இன்னும் நெருங்கி கிட்டிசேர, முடியுமோ, அவ்வளவாய், அவருடைய பலிபீடத்தின் கதவண்டையில், உட்கார்ந்திருக்க விரும்புகிறேன். பலிபீடத்தண்டையில், அவருடைய தோன்றுதலுக்காக காத்துக் கொண்டிருப்பதே, என்னுடைய மேலான எதிர்பார்ப்பாகும். 17ஆபிரகாம், தன்னுடைய நாற்காலியில் உட்கார்ந்தான், பாருங்கள், அந்த விசுவாசமுள்ள, வயோதிப, தேவனுடைய ஊழியக்காரன், தன் தலையை தாழ்த்தினவனாய், அங்கே அமர்ந்திருக்கிறான். ஒருவேளை, சாராள், சற்று சச்சரவுகள் நிறைந்தவளாய், பேசிக்கொண்டே இருந்தாள். ஆனால், ஆபிரகாமோ. அதை எல்லாம் கண்டு கொள்ளாதவனாய், ''தேவன், எத்தனை மகத்தான ஆசீர்வாதங்களை எனக்கு கொடுத்திருக்கிறார்..'' என்று, பின்னான நாட்களை குறித்து சிந்திக்க துவங்கினான். தேவகுமாரர்கள், தேவனுடைய ஆவியினாலே, வழி நடத்தப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆபிரகாம், அங்கே, உட்கார்ந்து கொண்டு, தேவன், சர்வ வல்லவருடைய நாமத்தில், ''எல்ஷடாயாக“ காட்சி அளித்த நேரத்தை சிந்தித்து கொண்டிருந்தான். ”எல்ஷடாய் என்றால் ஸ்திரிகளுக்குள்ள மார்பகங்களை கொண்டு, சக்தி அளிப்பவர் என்பதாகும்.'' இப்பொழுது, “ஷடாய்” (Shaddai) என்பதின் அர்த்தம், பன்மையை குறிக்கிற வார்த்தை என்பதை, நீங்கள் கவனிப்பீர்களானால், அது ஒரேஒரு மார்பகம் அல்ல, இரண்டு மார்பகங்களை குறிக்கிறது. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, அவருடைய தழும்புகளினால், நாம் குணமானோம். ஓ, அதற்காக நான், மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தேவனுடைய வாக்குதத்தமாகிய, இரண்டு மார்பகங்களினாலும், அவர் சக்தியை அளிக்கிறார். ஏனெனில், அவர் ஒருவரே பெலமுள்ளவர். நீ, அந்த தொன்ணுற்று ஒன்பது வயதுடைய, வயோதிப் ஆபிரகாமாய் இருக்கும் பட்சத்தில், அவர், “ஆபிரகாமே, நான் இரு மார்பகங்களை உடைய தேவன். நீ, என்னுடைய வாக்குதத்தங்களை பற்றி பிடித்துக்கொண்டு, என்னிலிருந்து சக்தியை உறிஞ்சி குடி” என்றார். அவ்விதமாகதான் அந்த வாக்குத்தத்தம், ஒவ்வொரு விசுவாசிக்கும் இருக்கிறது. அது தானே, தேவனுடைய வார்த்தையை எடுத்து, அதை சந்தேகப்படாமல், அப்படியே அதை பற்றிபிடித்து, உங்களுக்கான சக்தியை உறிஞ்சி குடிப்பதாகும். 18அது, ஒரு குழந்தையானது, தன் தாயினுடைய மார்பில் சாய்ந்து கொண்டிருப்பது போல் இருக்கிறது. அது, எல்லா நேரங்களிலும் பாலூட்டப்பட்டு, திருப்தியாய் இருக்கிறது. ஒரு அசலான கிறிஸ்தவன், தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றி பிடிக்க முடிந்து, அது, அவனுக்காகதான் என்று, அதை விசுவாசிக்கும் போது, அவன், அந்த சக்தியை உறிஞ்சி குடித்து, திருப்தி அடைகிறான். அவன் ஒரு துளியும் முறுமுறுக்க மாட்டான். அவன், திருப்தி அடைந்தவனாகவே இருக்கிறான். தேவன் அவ்விதமாக சொல்லியிருக்கிறார். என்பதை, அறிந்து கொள்வதினால், உண்டாகும் திருப்தியை நான் நேசிக்கிறேன். அந்த வயதான, பரிசுத்தவான், அங்கே தன் தலையை தாழ்த்தி கொண்டு அமர்ந்திருந்தான். அங்கே, அவன் ஜெபித்து கொண்டிருந்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் பின், அவன் தன்தலையை உயர்த்தின் போது, தன்னுடைய கூடாரத்தை நோக்கி மூன்று மனிதர்கள் வருவதை கண்டான். உடனடியாக அவன் குதித்து எழும்பினான். “அவர்களுக்கு எதிர்கொண்டு போ” என்று ஆவியானவர் தான் அவனுக்கு சொல்லியிருக்க வேண்டும். ஆவியினால் நிரப்பப்பட்ட மக்கள் மட்டுமே, தேவனுடைய பிரசன்னத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்பதை அறிவீர்களா? அது ஏன் அப்படி இருக்கிறது என்பதை நான் அறியேன். ஆனால், அவர்களுக்குள் இருக்கிற ஏதோ ஒன்று தான், தேவ ஆவியானவரிடத்திற்கு அவர்களை காந்தமாக கவர்ந்திழுக்கிறதாய் இருக்க வேண்டும். மேலும் அவன், அது ஏதோ ஒரு விசேஷித்த காரியம் என்பதை இனங்கண்டு கொண்டான். லோத்து, தன்னுடைய பின்மாற்றம் அடைந்த நிலையிலும் கூட, அந்த இரண்டு சுவிசேஷ தூதர்கள், செய்தியாளர்கள், சுவிசேஷகர்கள், அல்லது, உங்கள் விருப்பப்படி எப்படி அழைத்தாலும், அவர்கள் அங்கே வந்தபோது, லோத்து, வெளி வாசலண்டையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனுடைய இருதயத்தில் இன்னுமாக, ஒரு சிறிய தீப்பொறி அளவு அனல் இருந்துக் கொண்டிருந்ததினால், வந்தவர்கள் தூதர்கள் தான் என்பதை, இனம் கண்டு கொண்டான். அவர்கள் தேவனிடத்தில் இருந்து வந்த செய்தியாளர்களாய் இருந்தார்கள். 19ஆபிரகாம் அவர்களை சந்தித்து, அவர்களுடைய கவனத்தை தன் பக்கம் திரும்ப செய்து, உள்ளே வந்து உட்காருங்கள், சற்று நேரம் இந்த ஓக் மரத்தின் கீழாக அமருங்கள். நான் உங்கள் பாதங்களை கழுவுவதற்கு, கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருகிறேன், இந்த மரத்தடியில் சாய்ந்து கொண்டிருங்கள். நீங்கள், உங்கள் இருதயங்களை திடப்படுத்த, கொஞ்சம் அப்பம் கொண்டு வருகிறேன், அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம் என்றான். ஓ, அவன் அவர்களை அங்கே உட்கார வைத்தபோது, மற்ற மனிதர்களிலிருந்து அவர்கள் வித்தியாசமானவர்களாய் காணப்படாதிருந்தார்கள். ஏனென்றால், மற்றவர்களை போலவே அவர்களும் உடை உடுத்தியிருந்தார்கள். அந்த உடையின் மேல் தூசு படிந்திருந்தது. மேலும், அவர்கள் வேறு ஒரு தேசத்திலிருந்து வந்தவர்களாகவும், அவர்களுடைய பாதங்கள் தூசு படிந்து, அவர்களுடைய ஆடைகள் பழையதாயும் காணப்பட்டது. ஆனால், ஆபிரகாம் தனக்குள்ளாக, ஏதோ ஒன்று அங்கே அசலாய் இருப்பதை அறிந்திருந்தான். ஆவியானவர் அதை அவனுக்கு அறிவித்திருந்தார். ஏன்? எல்லா நேரத்திலும், தவறான காரியத்திலிருந்து, சரியானதை இனம் கண்டு கொள்ளதக்கதாக, அவன் எல்லா சமயத்திலும், ஆவிக்குரிய சூழ்நிலையில் தன்னை காத்துக் கொண்டிருந்தான். அந்த வழியில்தான் ஒரு கிறிஸ்தவன், இன்றைக்கு செய்ய வேண்டும். நீங்கள் எப்பொழுதும் ஜெபித்து, ஒரு ஆவிக்குரிய சூழ்நிலையின் கீழாக இருங்கள். ஒருபோதும் மோசமான பக்கத்தை பாராமல், எப்பொழுதும் நல்ல பக்கத்தையே நோக்கி பாருங்கள். நீங்கள், அவருடைய ஆசீர்வாதங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற தேவனுடைய பிள்ளைகள். 20அவர்களை நிறுத்தி உட்கார வைத்தபிறகு, அவன் உள்ளே ஓடி சென்று, சாராளை தன் கரங்களால் பற்றிபிடித்து, “அன்பே சற்று இந்த பக்கம் வா, நான் உன்னிடத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். அவர் நம்மிடத்துக்கு வருகை தந்த நாள், சரியாக, இந்த நாள் தான் என்பதை நான் விசுவாசிக்கிறேன்” என்று அவன் சொல்வதை என்னால் காணமுடிகிறது. அவன் வெளியே மந்தைக்குள்ளாக சென்று, ஒரு இளங்கன்றை பிடித்து, அதை தோலுரித்து கொண்டு வந்து, சமைத்து, அந்த மனிதர்களுக்கு புசிக்க கொடுத்தான். அவர்களில் இருவர், தங்கள் தலைகளை உயர்த்தி எழும்பி, அவர்களுக்கு குறிக்கப்பட்ட தேசத்துக்கு, சுவிசேஷத்தை பிரசங்கிக்க புறப்பட்டு போனார்கள். அவர்களுடைய பிரசங்கத்தினால் தான், அந்த தேசம் குருபாக்கப்பட்டது. சுவிசேஷத்தை பிரசங்கித்தல் அவிசுவாசியை எவ்வளவாய் குருடாக்கி போடுகிறது என்பதை, இன்றைக்கு நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். அவர்கள் பார்க்க முடியாததில் எந்த ஆச்சரியமும் இல்லை, ஏனென்றால், அவர்கள் குருபாய் இருக்கிறார்கள். தேவன், அவர்கள் கண்களிருந்தும் காணாமலும், காதுகளிருந்தும் கேளாமலும் இருப்பார்கள் என்று கூறியிருக்கிறார். தேவன், எனக்கு ஏதாவது ஒன்றை செய்ய விரும்புவாரானால், எங்கும் நிறைந்திருக்கிற அவரை, நான் சுற்றிலும் நோக்கி பார்த்து, அவரை இனம் கண்டு கொள்ளத்தக்கதாக, என் ஆவிக்குரிய கண்களை அவர் திறக்க வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். நான் அவரை பார்த்த, முதல் பார்வையிலேயே (Very First Sight) அவரை அறிந்து கொள்ளத்தக்கதாக, நான் அவரிடத்தில் மிகவும் பரிச்சயம் (Acquainted) உள்ளவனாக இருக்க விரும்புகிறேன். அப்பொழுது, ஆபிரகாம் இருந்தது போலவே நானும் இருக்க வேண்டும் என்பது என் இருதயத்தின் வாஞ்சையாய் இருக்கிறது. மேலும் நினைவில் கொள்ளுங்கள், நாம் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களாய் இருக்கும் பட்சத்தில், நாம் ஆபிரகாமின் சந்ததியாய் இருக்கிறோம். தேவனுடைய செய்தியாளர்களாக அங்கே வந்த அந்த மனிதர்களை, ஆபிரகாம் இனம் கண்டு கொண்டான். அவன் அவர்களை உபசரித்த விதானமே, அவர்கள் தேவனுடைய செய்தியாளர்கள் தான், என்று அவன் அறிந்திருந்ததை நிரூபித்து காட்டுகிறது. 21மற்ற இருவரும், தங்களுக்கு குறிக்கப்பட்ட இடத்தில், சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி சென்ற பிறகு, இவர் மட்டும், அதாவது, கர்த்தர், (L-O-R-D) ஏலோஹிம், மகத்தான வல்லமையுள்ள யேஹோவா, என்று அழைக்கப்பட்ட அவர், அங்கே ஒரு மனிதனாக மாம்சத்தில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பாக, யாரோ ஒருவர் என்னிடம் வந்து “இப்பொழுது, பில்லி ஒரு நிமிடம் பொறு. அங்கே வந்தது தேவன் தான் என்பதை நீ விசுவாசிக்கவில்லையா?” என்று கேட்டார். அதற்கு நான், “அவர் தேவன் தான் என்று நான் நிச்சயமாய் விசுவாசிக்கிறேன்” என்றேன். மேலும் அவர், “தேவன் எப்படி மனித ரூபத்தில் தோன்றி, இந்த உலகத்தில் இருக்க முடியும்?'' என்று கேட்டார். நான், நல்லது, நீர் அதை ஒரு தியாப்னி (Theophany) ஆவிக்குரிய சரீரம் என்று நினைக்கக் கூடும். ஆனால், அது அப்படியல்ல, ஏனென்றால், அவர் இளங்கன்றின் மாம்சத்துடன், சோள அப்பத்தை புசித்து, பால் குடித்து, அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவர் மனிதராய் (MAN) அங்கே இருந்தார். தேவன் ஏதோ ஒன்றை அங்கே காண்பித்துக் கொண்டிருந்தார் என்றேன்.“ ஓ, ஏன்? நம்முடைய தேவனுக்கு, தம் கரம் நிறைய சுண்ணாம்பு (கால்சியம்) பொட்டாசியம் பொட்டாஷ் மேலும் பெட்ரோலியம், போன்றவைகளை எடுப்பது இலேசான காரியம். நாம், இந்த உலகத்தின் பதினாறு மூலகங்களினாலே உருவாக்கப்பட்டிருக்கிறோம். அவர் எல்லா மூலகங்களையும் உண்டாக்கி, தன் கரத்தை நீட்டி, அவைகளை தன் கரம் நிறைய எடுத்து'' (ஊஹூஹூ) (whew) என ஊதினார். சகோ. பிரான்ஹாம் (whew) (ஊஹுஹு) ஊதுகிற சத்தத்தை எழுப்புகிறார். ஆசி) காபிரியேல் நீ அதற்குள்ளாக போ என்றார். மீண்டும் தன் கையை நீட்டி இன்னும் கொஞ்சம் எடுத்து (ஊஹூஹூ) (whew) என ஊதி, மிகாவேல் அதற்குள்ளாக போ என்றார். மீண்டும் தனக்கென்று இன்னும் கொஞ்சம் எடுத்து, (ஊஹூஹூ) (whew) என்று ஊதி, அதற்குள் தானே புகுந்து கொண்டார். ஏன், நிச்சயமாக, ஏதோ ஒரு நாளில் அவர் என்னை அழைப்பார். ஒரு வேளை, நான் அப்போது, இவ்விதமாக இல்லாமல் இருந்தாலும், உயிர்த்தெழுதலின் போது, மறுபடியுமாக என்னுடைய சரீரத்தில் வரும்படி என்னை அழைப்பார். அப்பேர்ப்பட்ட வல்லமையான தேவனை, நாம் நம்முடைய தேவனாக கொண்டிருக்கிறோம். அது, அவர் தான் என்று நான் நிச்சயமாக விசுவாசிக்கிறேன். அதன்பின், அவர் காணப்படாமல் மறைந்து போனார். அவருக்கு தேவையான மட்டும், அந்த சரீரத்தை உபயோகித்தப் பின், அதை மறுபடியும் பூமியின் தூளுக்கே திருப்பி அனுப்பி விட்டார். அப்படியே உன்னையும் அவர், விரும்பு மட்டும் உபயோகித்து, மறுபடியும் பூமியின் தூளுக்கே திருப்பி அனுப்புவார். அவ்விதமாகவே, என்னையும் அவர் விரும்பு மட்டும் உபயோகிப்பார். பின் நானும் பூமியின் தூளுக்கே திரும்புவேன். ஆனால், என்னே ஒரு மகிமையுள்ள எண்ணம், அந்த மகிமையுள்ள சத்தியம், ஏதோ ஒரு நாளில் அவர் அழைப்பார். அப்போது, நாம் பூமியின் தூளில் இருந்து எழுந்திருப்போம். நாம் அந்த மணி வேளையைத்தான் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறோம். 22இப்பொழுது, அவர் (கர்த்தருடைய தூதன்) இங்கே இருக்கிறார்.... மேலும், ஒரு நிமிடம் சாராளுடைய காரியங்களை குறித்து சற்று பகுத்து பார்ப்போம். அங்கே பின்புறத்தில் அவள் உட்கார்ந்து கொண்டு, “என்னுடைய கணவன் எத்தனை மத வெறியர்களை அழைத்து உபசரிப்பாரோ? அதை குறித்து ஆச்சரியப்படுகிறேன்” என்று கூறினாள். உங்களுக்கு தெரியுமா? அங்கே ஆபிரகாம் உட்கார்ந்து கொண்டு, அவ்விதமான உபசரிப்பில் மிகவும் விருப்பமுடையவனாய் இருந்தான். ஒரு வேளை, அந்த புதரிலிருந்து பறந்து வந்த ஈக்களை, மொய்க்காதபடிக்கு - (தமிழாக்கியோன்) அவன் விசிறி அப்புறப்படுத்திக் கொண்டிருந்தான் என்பதை நீங்கள் அறிவீர்களா? நல்லது, தூதனானவர் தன்னுடைய நாற்காலியில், பின்புறமாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறதை, நான் பார்க்கிறேன். அவருடைய பின்பாகம், கூடாரத்தை நோக்கி இருந்தது. மேலும், சாராள் கூடாரத்திற்குள் இருந்து கேட்டுக் கொண்டிருந்தாள். உங்களுக்கு தெரியுமா? அவள் மென்மையாக ஒட்டுக் கேட்டாள். அது எப்படி என்று உங்களுக்கு தெரியுமல்லவா? அவள் கூடாரத்திற்குள் இருந்து கேட்டுக் கொண்டிருந்தாள். அந்த காலை வேளையில், அவள் ஒருவித மோசமான மனநிலையில் இருந்தாள். நீங்களும் அந்தவித மனநிலையில் இருந்து சபைக்கு வருவீர்களானால், காரியங்களை உங்களால் காணமுடியாது. நீங்கள் அதை முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அவ்விதமாக வருவது, நீங்கள் வீட்டிலேயே தரித்து இருப்பதற்கு சமம் ஆகும். அதிலிருந்து நீங்கள் எதையும் பெற முடியாது. இருக்கிறவிதமாக அப்படியே வீட்டிற்கு போவீர்கள், நீங்கள் சபைக்கு வரும்போது, ஜெபத்திலே தரித்திருந்து, அதே சூழ்நிலையில் எதிர்ப்பார்ப்போடுகூட கடந்து வாருங்கள். 23வாக்குதத்தத்தின் நேரமானது, மிகவும் நெருங்கி வந்திருக்கிறது என்பதை, ஆபிரகாம் அறிந்திருந்தான். அது அப்படித்தான் இருக்க வேண்டும். அவன் நூறு வயது உடையவனாய் இருந்தான். அவன், அது எந்த நேரத்திலும் நடக்கலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன், ஒவ்வொரு நிமிடத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் உள்ளே ஓடி, சாராளிடத்தில், “இது தான், அவர் நம்மை சந்திக்கும் நாள் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறினபோது, சாராள், தன்னுடைய பெரிய கண்களை விரித்து ஒருவிதமாக, அவனை உற்றுநோக்கி, “நல்லது ஆபிரகாம், நீண்ட காலமாக இதையே தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று, தனக்குள் சிந்தித்தாள், ஆனால், உங்களுக்கு தெரியுமா? தேவன் அவ்விதமாக சொல்லியிருக்கும் பட்சத்தில், அது அப்படியே நடக்க வேண்டிய நேரம் வந்தே தீரும். பின்பு, அந்த தூதனானவர், தன்னுடைய நாற்காலியில் பின்பக்கமாக சாய்ந்து உட்கார்ந்த போது, அவர் ஆபிரகாமே, நீ தேவனிடத்தில் தயவு கிடைக்கப்பெற்று, இந்த உலகத்துக்கு ஒரு சுதந்தரவாளியாகவும், அநேக தேசங்களுக்கு தகப்பானாக ஆக போகிறதையும், உன்னுடைய எழுபத்தைந்தாவது வயதிலிருந்து, அதை விசுவாசித்துக் கொண்டிருக்கிறதையும், (இருபத்தைந்து வருடங்கள்) அதாவது, சாராளின் மூலம் வரப்போகும், வாக்குத்தத்த பிள்ளைக்காக நீ காத்திருக்கிறதையும், நான் காண்கிறபடியால், இப்பொழுது, அதைக் குறித்து என்ன செய்யப் போகிறேன் என்பதை, உனக்கு நான் மறைப்பேனோ? ஒரு உற்பவகால திட்டத்தின்படி உன்னிடத்திற்கு, திரும்பவும் வருவேன்“ என்றார். நீங்கள் அறிந்திருக்கிறபடி, அங்கே சாராள், அந்த காலை வேளையில், அவளுடைய பாதிக்கப்பட்டமன நிலையோடு, அவர்கள் பேசுவதை அரைகுறையாக ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள், தன்னுடைய உள்ளத்தில், இப்போது, அது ஒரு முட்டாள்தனமான காரியமாயிருக்கிறதல்லவா. இப்பேற்ப்பட்ட இந்த காலகட்டத்தில், நானே ஒரு வயதானவள், அதிலும், நான் எவ்வளவு வயது சென்றவாளாயிருக்கிறேன். இங்கிருக்கிற எனக்கு தொன்னூறு வயதாகிறது. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற என் கணவருக்கோ, நூறு வயது ஆகிறது. அதிலும், ஸ்திரீகளுக்கு உண்டாகிறது போல், ஐம்பது வருடங்களாக எனக்கு இல்லை. ஆபிரகாமுக்கும்... நல்லது, நாங்கள், என்னுடைய பதினேழு வயதிலும், அவருடைய இருபத்தேழாவது வயதிலிருந்தும், திருமணமானவர்களாய் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். எவ்விதமாக அது எப்படி இருக்க முடியும், அது எவ்வாறு இருக்க முடியும்? என்று நினைத்தாள். பாருங்கள், தேவன் அதை கொண்டு வந்த போது, அதை பெற்றுக் கொள்ளாதபடிக்கு, அவளுடைய நிலைமை மோசமான சூழ்நிலையில் இருந்தது. ஓ, என்னே! ஒரு காலும் அவ்விதமான நிலைமையை, நீங்கள் உங்கள் இருதயத்தில் கொண்டிருக்க வேண்டாம், வெளிப்படையாய் இருங்கள், ஆயத்தமாயிருங்கள், அவள் அதை தவறவிட்டாள். அவளோ, அதை காண தவறிப்போனாள். ஒரு வேளை, நாம் அதை கவனிக்காதிருக்கும் பட்சத்தில், நண்பர்களே! சபை அதை காண தவறிப்போகிறது, நாம் சபையின் சிகை அலங்காரத்தையோ, புதிய உடைகளையோ பார்க்காமல், பரிசுத்த ஆவியானவர், இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் வந்து, மகத்தான காரியங்களை எழுப்புவதை, நாம் எதிர்நோக்கி பார்க்க கட்டவோம். சபைக்கு புதுப்பொலிவான அழகு தேவையில்லை அதற்கு தேவையானது எல்லாம் ஒரு பிறப்புதான். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் சபைக்குள் வந்து, இயற்கைக்கு மேம்பட்டதை விசுவாசிக்க செய்து, அதை பற்றி பிடித்துக் கொண்டு, கர்த்தருடைய வருகையானது எந்த மணி வேளையிலும் நடக்கக்கூடும் என்று காத்திருக்கும் நிலையில், மக்களை திருப்பிக் கொண்டு வந்து ஜீவிக்க செய்யும். 24இங்கே, அவள் அந்த நிலையில் காணப்பட்டவளாய், இப்போது, இந்த நவீன காலத்தில் அது எப்படியாக நடக்க முடியும். என்னுடைய இந்த நிலையில், எனக்கு அது எப்படி நடக்கக்கூடும் என்றாள். ஆனால் அது அப்படியே மாறாமல் நடந்தது. அங்கே வெளியில், ஆபிரகாம் ஒரு எதிர்ப்பார்ப்போடு காத்துக் கொண்டிருந்தான். நீங்கள் பாருங்கள், அது அவளுக்கு தெரியாமல் இருந்தது. அதை எதிர்நோக்குகிறவர்களுக்கே அது தெரியப்படுத்தப்படுகிறது. இதுவரை, அந்த விதமாகதான், அதை எதிர்நோக்குகிறவர்கள்எவர்களோ, அவர்களுக்கே அது வருகிறது. ஆகவே, ஆபிரகாம் அதற்காக அங்கே காத்துக் கொண்டிருந்தான். அவன், “ஆம் என் ஆண்டவரே, ஆம் அது சரிதான். கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தை, இவ்வளவு காலமாய் நான் விசுவாசித்து கொண்டிருக்கிறேன்'' என்றான். அவர், “இப்பொழுது, ஆபிரகாமே! உற்பவகால திட்டம் என்பது, பெண்களுக்கு உண்டாகும் வழிபாடு குறித்து பேசுகிறார் (ஆசி) ஒவ்வொரு மாதமும் இருக்கும். நல்லது, நான் உன்னிடத்திற்கு திரும்பவும் வரப் போகிறேன். நீ அந்த குழந்தையை கொண்டிருக்க போகிறாய்” என்றார். மேலும், சாராள். தனக்குள்ளாக. மென்மையாக சிரித்தாள் என்பது உங்களுக்கு தெரியுமா? சகோதரன் பிரான்ஹாம் அவ்வாறு சிரித்துக் காட்டுகிறார் (ஆசி) கவனியுங்கள், ஆபிரகாம் இப்பொழுது, ஒரு அடையாளத்தை பெறுகிறான், பாருங்கள், சாராள் மிகவும் பதற்றம் அடைந்தவளாய், அவள் பார்த்த புதிய சிகை அலங்காரத்தை குறித்தும் அல்லது மற்றவைகளை குறித்தும் மிகுந்த நாட்டம் உடையவளாய் இருந்தாள். சில நேரங்களில், நாமும் மிக அதிகமாக மற்ற நபர்களை குறித்து, அதாவது, அந்த நபர், ஒரு பெரிய ஸ்தாபனத்தை பெற்றிருக்கிறார் அல்லது அவருடைய சபையார் என்னுடைய சபையோரை காட்டிலும், சிறப்பாக உடுத்துகிறார்கள் அல்லது நாம் பெற்றிருக்கிறதை விட அவர்கள், கீழே அந்த மூலையில், ஒரு பெரிய சபையை பெற்றிருக்கிறார்கள் என்று பதற்றமடைகிறோம். ஆனால், அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணும்? என்னுடைய தேவையெல்லாம் தேவனே. அங்கே தெரு மூலையில் கிடக்கிறது, அந்த நிலக்கரி கிறங்கிலே, அவரை ஆராதிக்க நேர்ந்தாலும், அதை குறித்து எனக்கு ஒரு கவலையும் இல்லை. அது எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும், என் தேவையெல்லாம் தேவனே. ஒரு சாதாரண உடையை நான் உடுத்தியிருந்தாலும், என்னுடைய இருதயம் சரியான நிலையில் இருக்கட்டும், அப்போது, நான் தேவனையும், அவருடைய அசைவையும் கவனித்து, அதை தவறவிடாமல், அவரை இனங் கண்டுக் கொள்வேன். 25அவர், ''ஆபிரகாமே, உன்னுடைய மனைவியாகிய சாராள் எங்கே?“ என்று கேட்டார். ஒரு அந்நியர், இதற்கு முன் ஒருபோதும் அவனை பார்த்திராதவர். அவர் அவனிடம், ”உன் மனைவியாகிய சாராள் எங்கே?“ என்றார். மேலும், அவனுக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்பது, அவருக்கு எப்படி தெரியும்? அதுவுமல்லாமல், அவளுடைய பெயர் சாராள் என்று அவருக்கு எப்படி தெரியும்? அதற்கு ஆபிரகாம், “அவள் உமக்கு பின்புறம் இருக்கிற கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். அங்கே, சாராள் சிரித்த போது, அவர், “ஏன் அவள் சிரித்தாள்?” என்று கேட்டார். அவன், அந்த அடையாளத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டான். அது என்னவென்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால், சாராளோ அதைப் புரிந்து கொள்ளவில்லை. அவள், அவருக்கு முன்பாக வந்து, அதை மறுதலிக்கக் கூட முயற்சித்தாள். அவள் மாத்திரம், ஆபிரகாமுடைய பாகமாய் இல்லாதிருந்திருப்பாளானால் அவள் அப்படி செய்ததனிமித்தம், தேவன் அவளை அழித்துப் போட்டிருப்பார். அநேக சமயங்களில், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மட்டும் நமக்காக இல்லையென்றால் நம்முடைய அவிசுவாசமே நம்மை அழித்துப் போட்டிருக்கும். இப்பொழுது, தேவனால் நம்மை அழித்துப்போட முடியாது. ஏனென்றால், இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் மட்டுமே, தேவனுடைய கோபாக்கினையில் இருந்து, நம்மை விலக்கி பாதுகாத்து வருகிறது. சாராள் எப்படி ஆபிரகாமுடைய பாகமோ, அப்படியே நாமும் கிறிஸ்துவின் பாகமாயிருக்கிறோம். ஏனென்றால், நாம் கிறிஸ்துவின் மணவாட்டியாய் இருக்கிறோம். மேலும், தேவனுடைய ஆவியினால் பிறந்த மக்களாகிய நாம், விழித்தெழுந்து, நம்முடைய குழப்பங்களிலிருந்து வெளியேறி, அவர் வாக்குத்தத்தம் செய்துள்ள அவருடைய அடையாளமாகிய, கர்த்தராகிய இயேசுவினுடைய வருகையின் இயற்கைக்கு மேம்பட்ட அடையாளத்தை நாம் கவனிப்போமாக. 26நினைவில் கொள்ளுங்கள். தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து, அதே காரியம் மறுபடியும் நடக்கும் என்று கூறினார். சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரனுடைய வருகையின் நாட்களிலும், அப்படியே நடக்கும் என்றார். அதாவது, தேவன் மனித மாமிசத்தின் மூலம் கிரியை செய்து, அப்போது, அவர் செய்த அதே கிரியைகளை செய்வதாகும். ஓ! தேவனே, விழித்தெழும்ப எங்களுக்கு உதவி செய்யும். அவர் நம்மை சந்திக்கும் நாள் இதுவே. நீங்கள், ''ஓ, தேவன் இனி ஒருபோதும் தூதர்களை அனுப்பமாட்டார்“ என்று கூறுகிறீர்கள். பரிசுத்த ஆவியானவரே, அந்த தூதனாய் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவரே அந்த நபர். பரிசுத்த ஆவியானவர் இயேசு, ”பரிசுத்த ஆவியாகிய அவர் வரும்போது, தான் செய்த கிரியைகளை திரும்பவும் செய்வார் என்றார். அவர் நம்மோடும், நமக்குள்ளும் இருந்து, அவர் போதித்த காரியங்களை நமக்கு நினைப்பூட்டி வரப்போகும் காரியங்களை காண்பிப்பார். “நான் செய்த கிரியைகளை அவரும் செய்வார்.” (“The works that I do shall He also”) இப்பொழுது, நாம் அந்த நாளில் தான் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். அந்த நேரத்தில் தான் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். கவனியுங்கள், ''சோதோமின் நாளில் நடந்தது போல“... ஆனால், அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சோதோமில் இருந்த, வேறே வகுப்பினராகிய அந்த மக்கள், அந்த அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. வெளியே அழைக்கப்பட்ட கூட்டம் மட்டுமே, அந்த அடையாளத்தைப் பெற்றுக்கொண்டது. அவர்கள் தான், அதை இனங்கண்டு புரிந்து கொண்டவர்கள். இன்றைக்கும் அது அவ்விதமாகவே இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர், அவருடைய கிரியைகளை செய்கிறார்... பெருங்கூட்டமும், உலகத்தின் திரளான மக்களும், நவீன சோதோம் கொமாராவாக இருக்கிறார்கள். அது அவ்விதமாகத்தான் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். 27ஏன்? சில நாட்களுக்கு முன்பாக, இங்கே, லாஸ் ஏஞ்சல்ஸில் நான் லாஸ் ஏஞ்செல்ஸிக்கு விமானத்தில் பறந்து சென்றபோது ஓரின புணர்சிகாரர்கள், சென்ற வருடத்தைக் காட்டிலும், நாற்பது சதவீதம் கூடுதலாகிவிட்டார்கள் என்பதை, செய்தி தாளில் நான் வாசித்தேன். ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் அறைக்குள் சென்று, மனைவியுடன் ஜீவிப்பது போல் ஜீவிக்கிறார்கள். தாறுமாறான காரியம், கச்சிதமாக அது தான் சோதோமின் பாவமாயிருந்தது, அதே காரியத்தைத்தான், இப்பொழுது நாம் பெற்றிருக்கிறோம். நம்முடைய அரசாங்கம் கூட அவ்விதமானவைகளினால் நிரம்பியிருக்கிறது. கம்யூனிஸம், மற்றவைகள் யாவும் உடைந்து கொண்டு போகிறது. ஒரு ராபின் பறவை கொத்துவதினால் ஆப்பிள் கெட்டு அழுகி போவதில்லை. ஆனால், ஏற்கனவே அந்த பழத்தின் மையப்பகுதியில் காணப்படும் புழுக்களே, அதை அழுகி கெட்டுப் போக செய்கின்றன. நான், ஜெர்மனி அல்லது இவ்விதமான மற்ற தேசங்களுக்காக பயப்படவில்லை. நம் மத்தியில் காணப்படும் நம்முடைய அழுகி போன தன்மையே, நம்மை, தேவனை விட்டு தூரமாக விலக்கி வைக்கிறது. அதுதான், இந்த தேசத்தை கொன்று கொண்டிருக்கிறது. மேலும், அது அழுகி போய் கொண்டிருக்கிறது. குளிர்ந்த சம்பிரதாய முறைமைகள், ஆவியினால் நிரப்பப்பட்ட சபைகளுக்குள்ளாக வந்து, அவைகளை குளிர்ந்து போக பண்ணுகிறது. அந்த காரியம் தான், நம்மை கொன்று போட போகிறது. இங்கு ஏதோ ஒன்றை நோக்கி பார்ப்பது அல்ல, அதாவது, உலகத்தின் பொருட்களையோ, பெரிய வேலைகளையோ, அருமையான நேரங்களையோ, பெரிய வாக்குறுதிகளையோ, மற்றும் இவ்விதமான காரியங்களையோ அல்ல, அவைகளிலிருந்து, உங்கள் பார்வையை விலக்கிவையுங்கள். அடையாளங்களை வாக்குத்தத்தம் பண்ணின் தேவன் இன்றைக்கும் மாறாதவராய் அதே தேவனாகவே இருக்கிறார், என்ற நிஜ தன்மைக்கு விழித்தெழும்புங்கள் அல்லேலூயா. அவர் இங்கே இருக்கிறார். அதை நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. 28பரலோகப் பிதாவே, நீரே தேவன், நித்திய தேவன், நான் உம்முடைய, சொந்த நேச குமாரனுடைய வார்த்தைகளையே மேற்கோள் காட்டி சொல்லுகிறேன். ஏனென்றால், அவர் அந்த நாளில் வானத்திலிருந்து அக்கினியானது விழுந்து, பட்டணத்தை அழிப்பதற்கு சற்று முன்பாக, சோதோமில் நடந்தது போல, மனுஷ குமாரனுடைய வருகையின் நாளிலும் அப்படியே நடக்கும் என்று கூறினார். இப்பொழுதும் பிதாவே, அங்கே தூரத்திலே, அணுகுண்டுகள் கொக்கியிலே தொங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும், அங்கே தீவுகளில் அணுகுண்டுகளும், நிலத்தில் நூற்று ஐம்பது அடி ஆழத்திற்கும், நூறு சதுர மைல்களுக்கு பரவி வெடித்து, துளையிடக்கூடிய ஹைட்ரஜன் குண்டுகளும், ஆயிரக்கணக்கில், இந்த ஒவ்வொரு தேசங்களை குறிபார்த்து வைக்கப்பட்டிருக்கிறதை நாங்கள் பார்க்கிறோம். நீர் மூழ்கி கப்பல்கள் தண்ணீர்களுக்குள்ளாக, தங்கள் வழிகளை சுற்றி வெப்பமயமாக்கிக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு இடங்களில் பூமி அதிர்ச்சிகளும், ஆகாயத்தில் பறக்கும் தட்டுகளும், மற்றும் மேலே வானத்திலே, பயங்கரமான காட்சிகளும், மனிதனுடைய இருதயங்கள் நின்றுபோக தக்கதாக, வேதனையான நேரங்களும், தேசங்களுக்கிடையே பதட்டமான சூழ்நிலைகளும் காணப்படுவதை நாங்கள் பார்க்கிறோம். ஓ தேவனே, அந்நேரம் நீர் இங்கு வந்து, பரிசுத்த ஆவியினாலே சபைக்குள்ளாக நுழைந்து அசைவாடி, அந்த சோதோமின் நாட்களை மறுபடியும் கொண்டு வருகிறீர். நாங்கள் சோதோமிய ஆவியை காண்கிறோம். ஸ்திரீகள், தெருக்களிலும் சபைகளிலும், ஒழுக்கக்கேடான உடைகளையும், எல்லாவித அசிங்கமான விதானத்தில் உடுத்தி, அதன் மூலம் தெருக்களில் புருஷர்களை கவர்ந்திழுக்கிறார்கள். அவர்கள் மேல் பொல்லாத ஆவி இருக்கிறதை, அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். அருமையான ஸ்திரீகள், அவர்களுடைய ஆத்துமாக்களை பாதாளத்திற்கு அனுப்புவதினால், அவள் சரீர பிரகாரமாக, லீலி புஷ்பத்தைப் போல சுத்தமாய் இருந்த போதிலும், அவள் அந்த விபச்சாரத்தை செய்ததற்காக, நியாயத்தீர்ப்பு நாளில் பதிலுரைத்தே ஆக வேண்டும். ஏனென்றால், அவள் தன் சரீரத்தை புருஷர்கள் இச்சிக்கும்படி படைக்கிறாள். ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும், அவளோடே தன் இருதயத்தில் விபச்சாரம் செய்தாயிற்று. மேலும் ஸ்திரீயானவள், அவ்விதமாக உடை உடுத்துவதினால், புருஷர்கள் அவளை இச்சித்து பார்க்கிறார்கள் என்பதை அவள் அறியாதிருக்கிறாள். அவள் அந்த விதமாய் விபச்சாரம் செய்தற்காக, பதிலுரைத்தே ஆக வேண்டும். ஏனென்றால், அவள் அவ்விதமாக உடை உடுத்தி புருஷனை கவர்ந்திழுக்கத்தக்கதாக தன்னை அனுமதிக்கிறாள். 29தேவனாகிய கர்த்தாவே, இந்த தேசத்தை நோக்கிப் பாரும், சபையை நோக்கிப் பாரும். சாத்தானுடைய காரியங்களை, பையானது அத்தனை சுலபமாக விழுங்கிவிட்டதை நோக்கிப் பாரும். மேலும் சாத்தான் இந்த பாதாளத்தின் கேடுபாட்டை அவர்களுக்கு போஷித்திருக்கிறான். அநேக ஆயிரக்கணக்கானோர் அதை விசுவாசிக்கிறார்கள். ஓ, கர்த்தராகிய இயேசுவே வாரும். கர்த்தாவே வாரும். நீர் சொன்னீர், அந்த வேலையானது (the work) குறைக்கப்படாவிட்டால் மாம்சமான ஒன்றும் தப்பிப் பிழைப்பதில்லை. அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை (மத்தேயு; 24:22) இந்த வசனத்தையே தீர்க்கதரிசி இங்கே குறிப்பிடுகிறார். (தமிழாக்கியோன்) உண்மையாகவே கர்த்தாவே, சபையானது, விழுந்து போவதையும், குளிர்ந்து போவதையும், இன்று நாங்கள் பார்க்கிறோம். இந்த பாபிலோனிலிருந்து தப்பிப் பிழைத்து, மீதியானவர்கள் அங்கே எழும்பி பிரகாசிப்பார்களாக, அவர்களை நீர், தேவ வல்லமையினால் நிரப்புவீராக, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் வந்து, தேவனுடைய மகத்தான கிரியைகளை செய்து, நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டவர்களை, மறுபடியும் மந்தைக்குள்ளாக இழுத்துகொள்வீராக! இதை அருளும் கர்த்தாவே, இதை அனுக்கிரகம் செய்யும். எங்கள் ஜெபங்களை கேட்டருளும். 30இன்றிரவு, இங்கு அமர்ந்து கொண்டிருக்கிற மக்களை, சில நிமிடங்களில் ஜெப வரிசைக்கு அழைக்கும் போது, அவர்கள் வரிசையில் வரப்போகிறார்கள். பிதாவே, நீர் மக்களை தட்டி எழுப்பி, அவர்கள், தாங்கள் ஒரு நவீன சோதோம் கொமாராவில் ஜீவிக்கிறோம், என்பதை அறிந்துகொள்ளும் படி செய்ய வேண்டும் என்று, நான் ஜெபிக்கிறேன். மனுஷ மாம்சத்தின் மூலம், வரப்போகிறதான, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட அந்த தூதனை, அவர்கள் காண அனுக்கிரகம் செய்யும் கர்த்தாவே. மேலும், கர்த்தாவே, அந்த தூதனானவர், பரத்தில் இருந்து வருகிற செய்தியாளனாகிய, பரிசுத்த ஆவியானவர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். சபையை அழைப்பதற்கு, தேவனுடைய சித்தத்தை, எங்கள் மூலமாக கிரியை செய்ய விரும்புகிறவர் அவரே, அதை அருளும் கர்த்தாவே, இன்றிரவு, மறுபடியும் அவரை அனுப்பும். அந்த மகத்தான ஏலோஹிம், புழுதிக்குள்ளாக வந்து, தன்னை காணக்கூடியவராக ஆக்கிக் கொண்டார். ஏனென்றால், அவரால் புழுதியின் மூலமாக மனிதனோடு பேச முடியும். இயேசுவின் ரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டு, உமக்கென்று அர்ப்பணிக்கப்பட்டுள்ள, இங்கே இருக்கிற, இந்த புழுதியை உபயோகியும் கர்த்தாவே, அவைகளை உபயோகப்படுத்தும் கர்த்தாவே. கர்த்தாவே, இங்கே யாராகிலும், அவிசுவாசிகள் இருப்பார்களானால், அந்த மணிவேளையானது சமீபித்திருக்கிறது என்பதை அவர்கள் காணட்டும். அவர்கள் அதை செய்தி தாள்களில் வாசிக்கிறார்கள். அவர்கள் அதை வானொலியிலும், தொலைக்காட்சிகளிலும் கேட்கிறார்கள். அவர் தம்முடைய சபைக்கு அவள் பெற்றுக்கொள்ளக்கூடிய முடிவும் கடைசியுமான அடையாளமாகிய, தேவனுடைய அடையாளத்தை அவர் அவளுக்கு கொடுப்பதை அவர்கள் காண்பார்களாக. மேலும் இப்பொழுது, நாங்கள் சுகமாக்குதல், அந்நிய பாஷை பேசுதல், அற்புதங்கள் மற்றும் அவ்விதமானவைகளை பெற்றிருந்தோம். ஆனால், இன்றிரவோ, அவர் எங்களை சந்திக்கிறதான வருகையை, நாங்கள் எதிர் நோக்கிப் பார்க்கிறோம். கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை அருளும், ஆமென். 31நான், உங்களை அதிக நேரம் வைத்திருந்ததிற்காக, என்னை மன்னியுங்கள். சகோதர, சகோதரிகளே, நான் ஒரு களிமண் கட்டியாய் இருக்கிறேன். எனக்கு, நீங்கள் எந்த கவனத்தையும் செலுத்த வேண்டாம். ஆனால், நான் சொல்வதற்கு செவி கொடுங்கள். கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாய் இருக்கிறது. அது எவ்வளவு சமீபம் என்பதை நான் அறியேன், எவரும் அறியார். ஆனால், அது நிஜமாகவே, கைக்கெட்டின தூரத்தில் இருக்கிறது என்பதை நான் விசுவாசிக்கிறேன். சகலமும் அப்படியே சம்பவிப்பதை நான் காண்கிறேன். ஆகவே, நீங்கள் மிகவும் ஆயத்தமாய் இருக்க வேண்டும், என்று நான் விரும்புகிறேன். நீங்கள் உண்மையாகவே விடுவிக்கப்பட்டவர்களாய் இருக்க வேண்டும், என்று நான் விரும்புகிறேன். “பாரமான யாவற்றையும், உங்களை சுலபமாய் வழிவிலக செய்கிற பாவத்தையும் விலக்கி, நம்முடைய விசுவாசத்தை துவக்கினவரும், முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி, நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிற ஓட்டத்தை பொறுமையோடு ஓடக்கடவோம்.” நீங்கள் அவருடைய சாந்தத்தையும், தாழ்மையையம் நோக்கிப் பாருங்கள். அவருடைய இரக்கத்தையும் பரிவையும் நோக்கிப் பாருங்கள். அவருடைய ஆவி மறுபடியும் பூமிக்கு திரும்பி வருகிறதை பாருங்கள். அது இன்னமும் அவர் ஜீவிக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. அவர் மரித்தவராய் இல்லை. அந்த சரீரத்தை கூட அவர்களால் கொல்ல முடியவில்லை. உண்மையாகவே, அவர்கள் அதை கொன்று போட்டார்கள். ஆனால், தேவன் அதை மறுபடியும் எழுப்பினார். மேலும், அது என்றென்றைக்குமாய் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. அது தேவனுடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்து இருக்கிறது. அதற்குள்ளாக இருந்த ஆவியானது, இன்றிரவு, இங்கே சபைக்குள்ளாக இருக்கிறது. அது வாக்களிக்கப்பட்டிருக்கிறது... நாம் கடைசி காலத்திற்குள்ளாக இருக்கிறோம். 32இப்பொழுது, அந்த இரவின் பொழுது, ஜெப அட்டைகளில் எந்த எண்ணிலே விட்டோம் என்பது என் ஞாபகத்தில் இல்லை. சிலவற்றை நாம் விட்டுவிட்டோம். சிலரை நாம் அழைத்தோம். பிறகு... (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசிரியர்) ஆமென், ஆமென். அது அவ்விதமாகவே இருக்கட்டும், தேவன் தன்னுடைய அற்புதங்களை நிகழ்த்துவதற்கு, புதிரான வழியில் கிரியைச் செய்கிறார். நினைவில் கொள்ளுங்கள். இந்த புத்தகத்தை எழுதின், அந்த பரிசுத்த ஆவியானவர், அங்கே சோதோமிலே, புழுதிக்குள்ளாக இருந்த அதே பரிசுத்த ஆவியானவர் தாமே, இன்றிரவு, இந்த கட்டிடத்திற்குள் இருக்கிறார். அவரால் அதே கிரியைகளை செய்ய முடியும். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்க கூடுமானால் எல்லாம் கூடும். நான் வார்த்தைக்காக தடுமாறி கொண்டிருக்கும் இந்த வேளையில், நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் ஏதோவொன்றை செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அது என்னவென்று நான் அறியாமலிருக்கிறேன். ஆகவே, என்னோடு கூட ஜெபியுங்கள். அப்பொழுது, கர்த்தர் ஏதாவதொரு வித்தியாசமான காரியத்தை செய்ய முயற்சிப்பார் அது என்னவென்பதை நான் அறியேன். நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் இருக்கையிலே பயபக்தியாய் அமர்ந்திருங்கள். இங்கே, இன்னும் சற்று நேரத்தில் என்ன நடக்கும் என்பதை நாம் அறியோம். இவ்விதமாக, இதற்கு முன்பு, இதை நான் ஒருக்காலும் பெற்றிருக்கவில்லை. அப்படியே ஜெபத்திலே தரித்திருங்கள், தேவனாகிய கர்த்தர், அதை நமக்கு வெளிப்படுத்துவார். 33ஆம், அது இங்கே இருக்கிறது. அங்கே சோதோமிலே இருந்த அந்த தூதனானவர், தன் முதுகை திருப்பி நின்று அந்த அடையாளத்தை காண்பித்தது போல, இங்கே இந்த சபையோருக்கு முன்பாக, நான் என் முதுகை திருப்பி காட்டி நிற்கப் போகிறேன். அப்பொழுது இன்றிரவு, இங்கே அதே தூதன் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இது உங்களுடைய சகோதரன் அல்ல, இது உங்களுடைய கர்த்தர், பரிசுத்த ஆவியானவர். இப்பொழுது, பல்வேறு சபை பிரிவுகளிலிருந்து, இன்றிரவு இங்கே கூடியிருக்கிற மக்களாகிய உங்களுக்கு, அது அவ்விதமாக தான் இருக்கும் என்று நான் சொல்லவில்லை... ஏதோ ஒன்று இதை செய்யும்படி என்னை செய்தது. ஆனால் இந்த கட்டிடத்திற்குள்ளாக, இங்கே பரிசுத்த ஆவியானவர் வந்து, அவர் சோதோமில் செய்தது போலவே, தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு, அதாவது வெளியே அழைக்கப்பட்ட மக்களுக்கு, அங்கே, இருக்கிற கூட்டத்திலிருந்து வேறு பிரிக்கப்பட்டவர்களுக்கு, அவர் அதை செய்வாராகில்... அவ்விதமாகத்தான் அவர் ஆபிரகாமிடத்திலும் வந்தார். அந்த தூதர்கள், செய்தியாளர்கள், சோதோமுக்கு சென்று பிரசங்கித்தார்கள். ஆனால் இவரோ, (ஏலோஹிம்) வெளியே அழைக்கப்பட்ட சபைக்காக தரித்து நின்றார். மேலும், அவர்தான் அந்த தேவன் என்பதை காட்டும் அடையாளத்தை கொடுத்தார். 34இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் அதை செய்யும் பட்சத்தில், நீங்கள் தேவனை விசுவாசித்து, தேவனே, நான் ஆபிரகாமின் பிள்ளையாய் இருக்கிறேன். மேலும் அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன் என்று உங்கள் இருதயத்திற்குள் ஜெபியுங்கள். மேலும், பரிசுத்த ஆவியானவர் வந்து, அங்கே அவர் செய்தது போல், இன்றிரவு இங்கே செய்வாராக! உங்கள் முழு இருதயத்தோடு நீங்கள் யாவரும் அவரை விசுவாசிக்கிறீர்களா? நாம் அப்படியே... இங்கே பியானோ வாசிப்பவர் அங்கே இருக்கிறாரா? அவர் வந்து பியானோவில், மகத்தான வைத்தியர் சமீபத்தில் இங்கே இருக்கிறார் (The Great Physician now is near) என்ற பாடலை மென்மையாக இசைப்பீரா? நாம் ஜெபிக்கிற இந்த வேளையில், அதை செய்வீரா? இப்பொழுது, இது ஆவிக்குரியதாய் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக, போர்ட் வெயின் இன்டியானாவில், அது வாசிக்கப்பட்டதை நான் நினைவு கூறுகிறேன். ஏதோ ஒன்று சம்பவித்தது. ஒரு டன் கார்டு சிறுமி, அதுவரை பரிசுத்த ஆவியை பெறாதவள், அப்பொழுது ஆவியினால் நிரப்பப்பட்டு, பியானோவில் இருந்து எகிறி குதித்து, வெளியே ஓடி வந்துவிட்டாள். ஏறக்குறைய ஐயாயிரம் மக்கள் அங்கே அமர்ந்திருந்து, ஆளில்லாத அந்த பியானோ, மகத்தான வைத்தியர் இங்கே சமீபித்திருக்கிறார் என்ற அந்த பாடலை தொடர்ந்து வாசிப்பதை கண்கூடாக பார்த்தார்கள். மக்கள் எவ்விடங்களிலும் எழும்பி நின்று சுகத்தை பெற்றுக் கொண்டார்கள். அங்கே அந்த கூட்டத்தில் அதிகமாக ஆமிஷ் (amish) மற்றும் டன்கர்ட்ஸ் (dunkards) மக்கள் இருந்தார்கள்... அது போர்ட் வெயின்... பரிதாபம் கொள்ளும் இயேசு (Sympathising Jesus) 35இங்கே எனக்கு பின்னால் உட்கார்ந்திருக்கிற என் சகோதரர்களை நோக்கி பார்க்கப் போகிறேன், நீங்கள் ஜெபியுங்கள். சகோதரரே, ஏதோ ஒரு நாளில், அக்கரையில் உள்ள தேசத்தில், நாம் ஒருவரையொருவர் சந்திக்கப் போகிறோம். அப்போது, நாம் கிறிஸ்து எனப்பட்ட இயேசுவை என்ன செய்தோம் என்றும், நம்முடைய ஊழியத்திற்கான கணக்கையும், நாம் ஒப்புவிக்க வேண்டும். நாம் நம்முடைய மக்களுக்கு அவர் நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவராயிருக்கிறார் என்று போதிக்கிறோம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். சகோதரரே, நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? இப்பொழுது, ஒரு கணம் எனது வலப்பக்கத்தின் கடைசியில் யாரோ ஒருவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு மனிதன். அவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் அவர் மிகவும் ஒரு மோசமான சூழ்நிலையில் இருக்கிறார். அவர் சுருங்கி விரியக்கூடிய, ஏதோ ஒரு பையில் (bladder trouble) உள்ள தொல்லையினால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். அவருக்கு அங்கே கட்டி இருந்தது, அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் மேலும், வேறொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. அங்கே கரத்தை உயர்த்திக் கொண்டு உட்கார்ந்திருக்கிற அந்த மனிதன் தான் அவர். அது உண்மை. அது உண்மையானால், நீங்கள் காலூன்றி நில்லுங்கள். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருப்போமானால், உங்கள் கரங்களை அசைத்துக் காட்டுங்கள். அதே தேவனுடைய தூதனானவர் இந்த கட்டிடத்திற்குள் இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! சகோதரனே, ஏற்றுக் கொள்ளுங்கள்... நீங்கள் எதை தொட்டீர்கள், ஐயா? நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் சுகத்திற்காக இங்கே இருந்தீர்கள் அல்லவா? அப்படியானால் நல்லது, நான் என் முதுகை உங்களுக்கு திருப்பி, இங்கே நின்றுக் கொண்டிருக்க, இயேசு, இந்த கடைசி நாட்களில், அவருடைய வருகைக்கு சற்றுமுன்பாக, சோதோமில் இதை அறிவித்த அதே தூதனானவர், இங்கே இருப்பார் என்று கூறியிருக்கிறார். அப்படியானால், மந்தையே, அவர் அவருடைய பாதையில் இங்கே இருக்கிறார். அவர் வந்து கொண்டிருக்கிறார். அது சரியே, ஜெபியுங்கள். 36இப்பொழுது, அவருக்கு அருகில் உட்கார்ந்துள்ள, சரியாக அவருக்கு பின்னால், அது ஒரு ஸ்திரீ, அவளுக்கு பக்கவாட்டில் பிரச்சனையிருக்கிறது. அவளுக்கு தலைவலி இருக்கிறது. திருமதி. அர்னால்ட், நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்தால். சரிதான். நான் உங்களை அறிந்திருக்கவில்லை, அது சரிதானே, சீமாட்டியே? நாம் ஒருவருக்கொருவர் அந்நியராயிருக்கிறோம்? அது உம்முடைய பெயரா? அது தானே உம்முடைய நிலை? நீர் ஜெபித்துக் கொண்டிருந்தீர், அப்படித்தானே? நீங்கள் எதையோ தொட்டீர்கள். சரியாக, பின்பக்கத்திலே உட்கார்ந்திருக்கிற அந்த மனிதன் உயர் இரத்த அழுத்த பிரச்சனையோடு இருக்கிறார், ஐயா, நீங்கள் விசுவாசிக்கும் பட்சத்தில், அது உங்களுடைய சுகம் என்று ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? என்னை நோக்கி பார்த்து கொண்டிருக்கிற, நரைத்த தலையுடைய ஐயா? உங்கள் முழு இருதயத்தோடு அதை விசுவாசிப்பீர்களா? அப்படி செய்வீர்களா? ஐயா, நல்லது, அப்படியானால், உங்கள் கரத்தை உயர்த்திக் காட்டுங்கள். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களல்லவா? அந்த மக்கள் எதை தொட்டார்கள். 37மேலும், இவை எல்லாவற்றிற்கும் மத்தியிலே, அவிசுவாசம் இங்கே உலாவுகிறதை நான் உணருகிறேன். நீங்கள் ஏன் அப்படி செய்கிறீர்கள். தேவன் இரக்கமாய் இருப்பாராக. நீங்கள் அப்படி சந்தேகப்பட வேண்டாம். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். ''இது கர்த்தர் உரைக்கிறதாவது“ நான், எனக்கு முன்பாக ஒரு ஸ்திரீயை காண்கிறேன். தன் தலையில் நீர் கோர்த்துள்ள, ஒரு குழந்தையை அவள் சுமந்து கொண்டிருக்கிறாள். அந்த குழந்தை, ஒரு அறுவை சிகிச்சையினூடாக சென்றது. அது தன் மூளையில் நீரை கொண்டிருக்கிறது. அவள் இங்கே, அந்த குழந்தையை சுமந்தபடி கீழே அமர்ந்திருக்கிறாள். நான் யாரிடம் பேசுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களா?திருமதி. ஏகர் (YEAGER) எழும்பி நின்று, குழந்தைக்காக விசுவாசியுங்கள். நீங்கள் கர்த்தரை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்க கூடுமானால்... இங்கே இருக்கிற இந்த பகுதியினரை குறித்தென்ன? நீங்கள், அதே பகுதியிலே தரித்திருந்து அங்கேயே விசுவாசித்துக் கொண்டிருங்கள். அப்பொழுது அதை காண்பீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 38இங்கே உட்கார்ந்து இருக்கிறதான், சீமாட்டி... உயர் இரத்த அழுத்தம் உடையவளாயிருக்கிறாள். சீமாட்டியே, நீங்கள் விசுவாசிப்பீர்களானால்... கர்த்தர் அவள் யார் என்பதை... திருமதி பி-ர்-லே (BIRLEY). பிர்லே, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கும் போது, உங்கள் சுகத்தை பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சரிதான். அங்கே வியாதியின் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கிற அந்த ஸ்திரீயை குறித்தென்ன? சீமாட்டியே, இந்த பக்கமாக பாருங்கள். உங்களிடத்தில் ஜெப அட்டை உள்ளதா? உங்களிடத்தில் இல்லை என்று நான் யூகிக்கிறேன். நல்லது. நான் கொடுக்கவில்லை, நான் நினைக்கவில்லை - ஜெப அட்டையை குறித்து, உங்களுக்கு சொல்ல நான் மறந்துவிட்டேன். உங்களில் ஒருவருக்கும் ஜெப அட்டை இல்லை என்று நான் யூகிக்கிறேன். உங்களிடம் ஜெப அட்டை இல்லை. சீமாட்டியே, நான் உம்மை சுகப்படுத்த முடியாது. ஆனால், தேவன் உம்முடைய பிரச்சனை என்னவென்று என்னிடம் கூறினால் அதை விசுவாசித்து ஏற்றுக் கொள்வீர்களா? அங்கே உங்கள் படுக்கையிலே மரிக்கப் போகிறீர்கள். அந்த காரியம் நிச்சயமானது. உங்கள் சரீரம் அளவுக்கதிகமாக அதிகமாக நீர் கோர்த்து காணப்படுகிறது. (OVER FLUIDED) அந்த நீர் மற்றும் யாவும் உங்களில் நிரம்பி இருக்கிறது. அது உண்மையில்லையா? என் வாழ்க்கையில் இதுவரை உம்மை நான் கண்டதில்லை. இப்பொழுது தான் முதன்முறையாக ஒருவரை ஒருவர் பார்க்கிறோம். நீங்கள் சந்தேகப்படாமல் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், அந்த நீர் உங்கள் உடலில் இருந்து வற்றிப்போகும், நீங்கள் உங்கள் வீட்டிற்கு சென்று சுகமாயிருங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தருடைய தூதனானவர் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களில் எத்தனை பேர் விசுவாசிகள். உங்கள் கரத்தை உயர்த்தி காட்டுங்கள். நல்லது. இப்பொழுது உங்கள் கரங்களை ஒருவர் மேல் ஒருவர் வையுங்கள். நீங்கள் விசுவாசிகளானால் உங்கள் கரங்களை ஒருவர் மேல் ஒருவர் வையுங்கள். ஓ, தேவனே, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தூதனாகிய, பரிசுத்த ஆவியானவர் இங்கு பிரசன்னமாகியிருக்க, சோதோமின் நாட்களில் நடந்தது போல், இங்கே நடக்கும் என்று இயேசு கூறினார். தேவனாகிய கர்த்தாவே, பிசாசானவன் இந்த மக்களை விட்டு போகும்படி செய்யும், அவர்களுக்காக வைராக்கியம் கொண்டு, அவர்களை உமக்கு முன்பாக வைக்கிறேன். சாத்தானே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த கூட்டத்தை விட்டு வெளியே வா, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இந்த மக்களை விட்டு விலகி, இந்த கட்டிடத்திலிருந்து காணப்படாமல் போ, இயேசு கிறிஸ்து என்றென்றைக்கும் மகிமையும், வல்லமையும் எடுத்துக் கொள்வாராக. இப்பொழுது, நீங்கள் அவரை உங்கள் முழு இருதயத்தோடும் நம்பி அவர் உங்களை சுகமாக்குகிறார் என்று விசுவாசியுங்கள். இந்த அடையாளங்கள்... என்று வேதாகமம் கூறுகிறது. அது சரிதான். சீமாட்டியே, அந்த படுக்கையை விட்டு அப்படியே எழும்பி வீட்டுக்குப் போங்கள். அதுதான் வழி, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், எல்லாவிடங்களிலும் உங்கள் கால் ஊன்றி நில்லுங்கள். இயேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள். கர்த்தருடைய தூதனானவர் இங்கே இருக்கிறார். நான் உங்களுக்கு சுகமளிக்கும், ஆசீர்வாதங்களை அறிவித்து, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வல்லமையை உங்களுடைய கரங்களில்.